Home செய்திகள் பாலக்கோடு பகுதியில் கோடைவெயில் தாக்கத்தால் மாபூக்கள் , மாங்காய் பிஞ்சு உதிர்வு மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை!

பாலக்கோடு பகுதியில் கோடைவெயில் தாக்கத்தால் மாபூக்கள் , மாங்காய் பிஞ்சு உதிர்வு மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை!

by Askar
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் சுமார் 10ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. தற்போது கோடை வெயில் மற்றும் வறட்சியினால் மாபூக்கள், மாங்காய் பிஞ்சுகள் உதிர்ந்து வருவதால் மகசூல் பாதிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம்,ஜிட்டாண்டஅள்ளி, அண்ணாமலைஅள்ளி,குண்டாங்காடு போன்ற பகுதியில் செந்துரா,பெங்களூரா, அல்போன்சா, பீத்தர், மல்கோவ,நீலம், பங்கன்பள்ளி போன்ற 30க்கும் மேற்பட்ட மாம்பழவகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றது. இங்கு விளையும் மாம்பழங்கள் உள்ளநாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகின்றனர். அதே போல் மா வகைகளை கொண்டு மாங்கூழ் தயார் செய்ய 10க்கும் மேற்பட்ட தொழில்சாலைகள் இயங்கி வருகின்றது. ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் மாம்பூக்கள் பூத்து குலுங்க தொடங்கியுள்ளது. கடந்தாண்டை காட்டிலும் வறட்சியின் காரணமாக மாபூக்கள் குறைந்த அளவே பூத்து உள்ளது. மேலும் இப்பகுதியில் கோடை வெயில் தாக்கம் மற்றும் கடுமையான வறட்சியினால் மாம்பூக்கள் கருகி கீழே விழுகின்றன. இதனால் நடப்பாண்டில் மா உற்பத்தி கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே இப்பகுதியில் நீர்பாசன திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!