Home செய்திகள் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் “தடுப்பூசி” தட்டுபாடு! பொது மக்கள் அவதி.!

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் “தடுப்பூசி” தட்டுபாடு! பொது மக்கள் அவதி.!

by mohan

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என்று 40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த மையங்கள் மூலமாக 18 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.பல மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் வித்தியாசமான பரிசுகளும் கொடுக்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது.இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போடுவதற்காக மக்கள் அலை மோதினர்.ஆனால் ஒவ்வொரு முகாம்களிலிலும் அதிகபட்சமாக 55 ஊசிகள் மட்டுமே கையிருப்பு வைத்திருந்தனர்.ஆகையால் தடுப்பூசி விரைவில் தீர்ந்து விட்ட நிலையில் ஆர்வமுடன் வருகை தந்த பொதுமக்கள் மத்தியில் மாபெரும் அதிருப்தியை உருவாக்கியது.இது சம்பந்தமாக பொதுமக்கள் கூறியதாவது;மிகுந்த ஆர்வமுடன் குடும்பம் குடும்பமாக வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று முகாமுக்கு வந்திருந்தோம் ஆனால் சிறிது நேரத்திலேயே தடுப்பூசி தீர்ந்து விட்டது கொஞ்ச நேரம் காத்திருங்கள் வந்து விடும் என கூறினார்கள். ஆனால் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் ஆகிவிட்டது இன்னும் சரியான முறையில் பதில் கிடைக்கவில்லை ஆகையால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக தட்டுபாடு ஏற்பட்டுள்ள முகாம்களுக்கு தடுப்பூசி கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com