Home செய்திகள் ராமநாதபுரத்தில்  டெங்கு காய்ச்சல் தடுப்பு வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்..

ராமநாதபுரத்தில்  டெங்கு காய்ச்சல் தடுப்பு வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம், செப்.22- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொதுக்காதாரத்துறை மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் வகித்தார். பொதுசுகாதாரத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

அவர் தெரிவிக்கையில், மழைக்காலங்களில் அதிகமாக பரவக்கூடிய கொடிய வைரஸ் டெங்கு காய்ச்சல் தொற்றாகும். இது ADS என்ற கொசு இனம் மூலம் மக்களிடையே எளிதாக நோயை பரப்பும் குணம் கொண்டதாக உள்ளது. இந்த வைரஸ் குழந்தைகளை எளிதாக தாக்கக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. இத்தகைய கொடிய வைரஸ் நோய் தொற்றை தடுப்பது என்பது சுகாதாரத்துறையாக இருந்தாலும் அவர்களுக்கு பொதுமக்களும் முழுஒத்துழைப்பு கொடுத்து நோய் தொற்றை தடுக்க சுகாதாரத்துறையினருடன் ஒருங்கிணைந்து செயல்படும் பொழுது டெங்கு காய்ச்சல் என்னும் கொடிய நோய்தொற்றை முற்றிலுமாக தடுத்திட முடியும், பொதுசுகாதாரத்துறையுடன், உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து களப்பணிகளை மேற்கொண்டு பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை துவங்கவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் வீட்டை சுத்தமாக வைத்தாலே, தெரு சுத்தமாகிவிடும், தெரு சுத்தமாக இருந்தால் ஊர் சுத்தமாக இருக்கும் இது இயல்பு. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வீட்டிலும் பயன்பாடற்ற பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும். தண்ணீர் தேக்கி வைக்கும் பாத்திரங்களை சுத்தம் செய்து தண்ணீர் தேக்கி மூடி வைத்து பயன்படுத்த வேண்டும். பழைய டயர், தேங்காய் சிரட்டை, அம்மிக்கல் போன்றவற்றில் மழை தண்ணீர் தேங்கும். அதனால் தேங்காய் சிரட்டை, பழைய டயர் இவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். வீட்டில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் வீட்டின் வெளியில் இருந்தால் மூடி வைத்து மழை தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல் வீட்டில் பயன்படுத்தக்கூடிய பிரிட்ஜில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக கொசு முட்டையிட்டு 22 நாட்களில் புதிய கொசுக்கள் உற்பத்தியாகி விடுகின்றன. சுமார் 4 கிலோ மீட்டர் பறக்கும் தன்மை கொண்ட கொசு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக சென்று விடும். அதிலும் குறிப்பாக குழந்தைகளை அதிக பாதிப்படையச் செய்யும். இத்தகைய வைரஸ் கொசுவை தடுப்பதற்கு ஒவ்வொரு வீட்டிலும் சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின்படி பயன்பாடற்ற பொருளை அப்புறப்படுத்தினாலே நோய் தாக்குதலை குறைத்திட முடியும். மேலும் சிறியவர் முதல் பெரியவர் வரை காய்ச்சிய குடிதண்ணீரை பயன்படுத்த வேண்டும். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி துறைகள் மூலம் மேல்நிலை நீர் தேக்கதொட்டிகளை குளோரிநேசன் செய்து தண்ணீர் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். சாலைகளில் மழைநீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்வதுடன் சமூக அமைப்புகளும் பொதுஇடங்களில் மழை தர்னணீர் தேங்கும் வகையில் பொருட்கள் பயன்பாடற்று கிடந்தால் அப்புறப்படுத்த முன்வர வேண்டும். தொடர்ந்து காய்ச்சல், இருமல போன்ற அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று உரிய மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். மருத்துவத்துறையை பொறுத்தவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. இருந்த போதிலும் அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பொதுமக்களுக்கு டெங்கு நோயை தொற்று தடுப்பு குறித்து விழிப்புணார்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களும் பொதுசுகாதாரத்துறைக்கு உறுதுணையாக இருந்து சுகாதாரத்துடன் இருக்கும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து மாவட்டத்தில் டெங்கு நோய் தொற்று பாதிப்பு இல்லை என்ற நிலையை உருவாக்கிட வேண்டும் என தெரிவித்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் செந்தில்குமார், பொதுசுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் அர்ஜுன் குமார், இந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!