Home செய்திகள்கீழக்கரை செய்திகள் டெல்லியில் பட்டினிக் கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் பரிதாபச் சாவு – பாஜக/காங்கிரஸ் கண்டனம் – தலைநகர் அவல நிலை..

டெல்லியில் பட்டினிக் கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் பரிதாபச் சாவு – பாஜக/காங்கிரஸ் கண்டனம் – தலைநகர் அவல நிலை..

by ஆசிரியர்

தலைநகர் டெல்லியில் உள்ள மந்தாவாலி பகுதியில் பசிக் கொடுமையால் உணவு இல்லாமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பசிக்கொடுமைக்கு இறந்த இந்த 3 சிறுமிகளுக்கும் 2 வயது முதல் 8 வயது வயதைச் சேர்ந்தவர்கள். இந்தச்சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்த டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

 இது குறித்த விவரம் வருமாறு:

டெல்லியில் உள்ள மந்தாவாலி பகுதியில் உள்ள ஜிடிபி அரசு மருத்துவமனைக்கு நேற்று நண்பகலில் 8 வயது, 4 வயது, 2 வயதைச் சேர்ந்த சிறுமிகள் 3 பேர் உடல்நலக்குறைவுடன் கொண்டுவரப்பட்டனர். இந்த 3 சிறுமிகளையும் அவரின் தாயும், அவரின் தோழியும் அழைத்து வந்தனர்.

இந்தச் சிறுமிகள் 3 பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள் இவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டனர் எனத்தெரிவித்தனர். இதையடுத்து, மருத்துவமனை சார்பில் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தச் சிறுமிகளின் தாயிடம் விசாரணை நடத்திய போலீஸார் உடற்கூறு ஆய்வுக்குஅனுப்பி வைத்தனர்.

உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள் அறிக்கையில், அந்த 3 சிறுமிகள் உடலின் வயிற்றிலும் எந்தவிதமான உணவும் இல்லை, இவர்கள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். இந்தச் சிறுமிகளின் உடலிலும், உடல் உள்ளுறுப்புகளிலும் எந்தவிதமான காயமும் இல்லை முறையான உணவுகள் இல்லாத காரணத்தால், பட்டினியால் இறந்துள்ளனர் என்று தெரிவித்தனர்.

இது குறித்து டெல்லி கிழக்கு போலீஸ் துணைஆணையர் பIங்கஜ் சிங் விசாரணை நடத்தினார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

இறந்துபோன 3 சகோதரிகளும் முறையான உணவு இல்லாமல், பட்டினியால் உயிரிழந்துள்ளனர் என மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த சிறுமிகளின் வயிற்றில் எந்தவிதமான உணவும் இல்லை.

இந்தச் சிறுமிகள் 3 பேரும் சகோதரிகள். இவர்கள் தனது தாயுடன், அவர்களின் உறவினர்கள் வீட்டில் தங்கி இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் அந்தச் சிறுமிகளின் தந்தையின் ரிக்ஷா திருடுபோய்விட்டது. இதனால், வேலைகிடைக்காமல், வேலை தேடி அலைந்து வருகிறார்.

அவரையும் போலீஸார் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடைசியாகக் கடந்த திங்கள்கிழமை இந்தச் சிறுமிகள் 3 பேரும் உணவு சாப்பிட்டுள்ளனர். இந்த சிறுயின் தாயிடம் விசாரணைநடத்திய போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று பேசுகிறார்.

இந்தச் சிறுமிகள் எவ்வாறு இறந்தார்கள் என்பது குறித்து கூட அவருக்கு சொல்லத் தெரியவில்லை. இவர்கள்4 பேரும் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று போலீஸார் விசாரணை நடத்தியபோது, அங்கு சில மாத்திரைகளும்,மருந்து குப்பிகளும் இருந்தனர். அது குறித்து விசாரணை நடத்திய போது, அந்த 3 சிறுமிகளுக்கும் வயிற்றுப்போக்கு, வாந்தி இருந்ததால், இந்த மாத்திரைகள் வழங்கியதாக அந்தச்சிறுமிகளின் தாய் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் இந்த குடும்பத்தினர் இப்பகுதிக்கு வந்ததால், அருகில் உள்ளவர்களுடன்நெருக்கமுடன் பழகாமல் இருந்துள்ளனர். இந்த சிறுமிகளின் தாய் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். அவர்கள் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட மருந்துகளும் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மருத்துவர்கள்நடத்திய உடற்கூறு ஆய்வில் அந்தச் சிறுமிகள் 3 பேரும் பலநாட்கள் சாப்பிடாமல், உணவு இல்லாமல்பட்டினியால் இறந்துள்ளனர் என ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கிறார்கள்.

இவ்வாறு போலீஸ் துணை ஆணையர் தெரிவித்தார்.

இந்த 3 சிறுமிகள் இறந்தது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க டெல்லிஅரசு உத்தரவிட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் 3 சிறுமிகள் பட்டினியால் இறந்ததற்கு காங்கிரஸ், பாஜக கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து, ஆம் ஆத்மி அரசை விமர்சித்துள்ளன.

பாஜக கண்டனம்

டெல்லி மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி கூறுகையில் , ‘‘டெல்லியில் மனதை உருக்கும் சோக நிகழ்வுநடந்துள்ளது. ஆனால், அரசு ஏழைகளுக்கு ரேஷன் பொருள்கள் வழங்குவதாகப் பெருமைப்படுகிறது. அரவிந்த் கேஜ்ரிவால் அரசு ஏழைகளின் அடிப்படை வசதிகள் மீது அக்கறை காட்ட வேண்டும். சிறுமிகளின்இந்த மரணம் என்னை அதிர்ச்சியடைய வைக்கிறது’’ எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் விமர்சனம்

டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அஜக் மக்கான் கூறுகையில், ‘‘டெல்லி மந்தாவாலி பகுதியில் 3 சிறுமிகள்பசியால் இறந்துள்ளனர் என உடற்கூறு அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த குடும்பத்தாரிடம்ரேஷன்கார்டுகள் இல்லை.டெல்லியில் 33.5 லட்சம் ரேஷன் கார்டுகள் இருந்த நிலையில் இப்போது 15 லட்சம்ரேஷன் கார்டுகளாகக் குறைந்துவிட்டது.

9 லட்சம் குடும்பங்களுக்கு ரேஷன் கார்டு மறுக்கப்பட்டுள்ளது. 3 குழந்தைகள் பசியால் இறந்துள்ளனர், ஆனால் இந்த தொகுதி எம்எல்ஏ மணிஷ் சிஷோடியா ரூ.20 லட்சத்துக்கு கார் வாங்கியுள்ளார்’’ எனத் தெரிவித்துள்ளார்.

செய்தி மூலம்:- தி இந்து நாளிதழ்..

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!