
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி கிராமத்தில் ஐந்து வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் ஒன்று தண்ணீர் குடிப்பதற்காக ஏர்வடி கண்மாய் கரையோரம் வந்துள்ளது அங்கு சுற்றித் திரிந்த நாய்கள் புள்ளிமானே கடித்து குதறியதால் பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்து காலை 7 மணி அளவில் கீழக்கரை சரக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனச்சரக அதிகாரி சிக்கந்தர் பாஷா தலைமையில் வனத்துறையினர் இறந்த புள்ளிமானை மீட்டு புதைத்தனர்.
கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு
You must be logged in to post a comment.