தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் டிசம்பர் கொண்டாட்டம் (DECEMBER DELIGHT)…

தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 29.12.2017 அன்று காலை 10.00 மணியளவில் டிசம்பர் கொண்டாட்டம் (DECEMBER DELIGHT) நடைபெற்றது. இறைவணக்கத்துடன் தொடங்கியது.

இவ்விழாவில் ஜே.ஹதிஜத்து ராலியா இளங்கலை மூன்றாமாண்டு தகவல் தொழில் நுட்பவியல் மாணவி வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் எஸ் சுமையா தலைமையுரை வழங்கினார். திருமதி குர்ரத் ஜெமிலா, புரவலர் சீதக்காதி தொண்டு நிறுவனம் சென்னை மற்றும் செயலாளர் இஸ்லாமியப் பெண்கள் சங்கம் இராமநாதபுர மாவட்டம் அவர்கள் தொடக்கவுரையாற்றினார்கள். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பேச்சுப்போட்டிகள், பசுமை அணிவகுப்பு, நிலைக்காட்சி, குழுப்பாடல், சைகைச்செயல்பாடுகள் போன்ற கலை நிகழ்ச்சிகளை மாணவிகள் நிகழ்த்தினார்கள். கல்லூரி தாளாளர் மருத்துவர் ரஹ்மத்துன்னிசா அப்துர் ரஹ்மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியதோடு கலைநிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

இறுதியாக எஸ்.இராமலெட்சுமி, இளங்கலை இரண்டாமாண்டு கணிதவியல் மாணவி நன்றியுரை வழங்க இனிதே விழா நிறைவுற்றது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கூடுதல் பாடத்திட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.