மதுரையில் லாட்ஜ் ஊழியர் மயங்கி விழுந்து சாவு…

மதுரை இளமனூர் முத்து தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 46). இவர் மதுரை தனியார் லாட்ஜ் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் விஜயகுமார் நேற்று திடீர்நகர் பகுதியில் உள்ள கிளாஸ் கார தெருவில் நடந்து சென்றார். அப்போது திடீரென்று மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விஜயகுமாருக்கு குடிப்பழக்கம் உண்டாம். இதன் காரணமாக அவர் இறந்தாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பாக திடீர்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..