தொடர்ந்து இறந்த நிலையில் ஒதுங்கும் ஆமைகள்..

கீழக்கரையில் நேற்று (23-07-2017) இரவு ஆமைக்கூடு கடற்கரை பகுதியில் பச்சை நிற ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. கடந்த ஆறு மாதங்களில் இது போன்று ஆமைகள் இறந்த நிலையில் ஓதுங்குவது மூன்றாம் முறையாகும்.

இதுபற்றி கடல் சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், சமீப காலங்களில் கடல் மிகவும் மாசடைந்துள்ளது, அதற்கு கடற்கரைக்கு வரும் மக்கள் பிளாஸ்டிக் போள்ற மக்காத பொருட்களை கடலில் வீசி எறிவதே முக்கிய காரணமாகும். அவ்வாறு கடலில் வீசப்படும் பொருட்களை கடல் பிராணிகள் உண்பதன் மூலம் உயிரிழக்க நேருகிறது. பொதுமக்களும் முழமையாக ஒத்துழைக்கும் பட்சத்தில் இது போன்ற கடல் பிராணிகளின் இறப்புகளைத் தவிர்க்கலாம்.