Home செய்திகள் காலை உணவு வாங்க சென்ற மூதாட்டி மீது போர்வெல்  ஆழ்துளை கிணறு போடும் வாகனம் மோதி சம்பவ இடத்தில் பலி..

காலை உணவு வாங்க சென்ற மூதாட்டி மீது போர்வெல்  ஆழ்துளை கிணறு போடும் வாகனம் மோதி சம்பவ இடத்தில் பலி..

by ஆசிரியர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அவனியாபுரம் பகுதியில் உள்ள திருவனந்த பிள்ளை தெருவில் வசிப்பவர் .வடிவேல் இவரது .மனைவி ராமம்மாள் (வயது 80).

இவரது கணவர் 10 வருடங்களுக்கு முன் இறந்திடவே இவரது மருமகன் சரவணன் என்பவர் பராமரிப்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் அயன் பாப்பாக்குடி அருகே இன்று காலை உணவு வாங்குவதற்காக சென்று திரும்பி கொண்டிருந்தபோது போர்வெல் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலே ராமம்மாள் பலியானார் .

விபத்து குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர் மேலும் ராமம்மாள் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விபத்தை ஏற்படுத்திய போர் வெல் வாகன ஓட்டுனர்  சுந்தரத்தின் மீது அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்..செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com