போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி மாற்றம்…

தமிழகம் முழுவதும் போலீயோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 19, பிப்ரவரி 23 நடைபெறும் என முதலில் விளம்பரப்படுத்தப்பட்டது.

அதன் தொடர்பாக பல சமூக வலை தளங்கள் மற்றும் இணையதளங்களில் அறிவிப்பும் வெளியானது. கீழக்கரை நகர் பகுதிகளில் பலர் முகாம் நடைபெறும் இடங்களுக்கு சிறுவர் சிறுமியரை அழைத்து சென்று முகாம் நடைபெறவில்லை என பெற்றோர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர்.

இது குறித்து திருப்புல்லாணி சுகாதார ஆய்வாளர் செல்லக் கண்ணு கூறுகையில் ” சில அரசாங்க அலுவல்கள் சிக்கல் காரணமாக போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 28 மற்றும் பிப்ரவரி 11 தேதிகளுக்கு சென்னையில் இருந்து வந்த உத்தரவின் பேரில் தேதி மாற்றப்பட்டு உள்ளது ” என தெரிவித்தார்.

1 Comment

2 Trackbacks / Pingbacks

  1. நினைவூட்டல் - நாளை (28-01-2017)போலியோ சொட்டு மருந்து முகாம்... - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயி
  2. நினைவூட்டல் - நாளை (28-01-2018)போலியோ சொட்டு மருந்து முகாம்... - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயி

Comments are closed.