உயிரை காவு கொள்ள காத்திருக்கும் பூலாங்குளம் சாலை – நெடுஞ்சாலைத்துறை கண்டுகொள்ளுமா?

நெல்லை மாவட்டம் பூலாங்குளம் To ஆண்டிப்பட்டி வரை இரண்டு மாதத்திற்கு முன்பு புதிதாக 4 கீமீ தூரம் வரை போடப்பட்ட சாலை மற்றும் பாலம் மிக மோசமான நிலையில் உள்ளது. சாலை போடப்பட்டு இரண்டு மாதம் ஆகிய நிலையில் சாலையின் மிக அருகே மின்கம்பம் நிற்கும் ஆபத்தான நிலை உள்ளது. மரங்களில் மஞ்சள் பெயிண்ட், வெள்ளை பெயிண்ட் எதுவும் அடிக்கப்படாததால் இரவில் வரும் வாகனங்கள் மரங்களில் மோதி அடிக்கடி விபத்து நடைபெறுகிறது.

இந்நிலையில் 14.03.19 நேற்று இரவு அடைக்கலப்பட்டணம் SMA என்ற தனியார் பள்ளி ஸ்கூல் டிரைவர், பைக்கில் வந்து கொண்டிருந்தவர் திடீரென சாலையின் அருகில் உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகி அவர் கால் முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது போன்ற கோர விபத்துகள் தொடர்ந்து இரவில் அடிக்கடி நடந்த வண்ணம் உள்ளன.

சாலையின் வளைவுகளில் வளைவு தொடர்பான அறிவிப்பு பலகையின்றி ஆபத்தான நிலை காணப்படுகிறது. மின்கம்பத்தை மைல் கல்லாக உபயோகித்து கீமீ எழுதி வைத்துள்ளளது இந்த சாலையின் மிகப்பெரும் அவலம். சாலையில் உயிர் பலிவாங்க காத்திருக்கும் மின்கம்பம் குறித்தும்,சாலையின் ஏனைய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் தென்காசி கோட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கோள்ள வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்