Home செய்திகள்கீழக்கரை செய்திகள் பாலக்கோடு நகரில் ஆபத்தான பயணத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள்.. பீதியில் பொதுமக்கள்.. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா??

பாலக்கோடு நகரில் ஆபத்தான பயணத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள்.. பீதியில் பொதுமக்கள்.. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா??

by ஆசிரியர்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகருக்கு சுற்றுவட்டார பகுதியில் இருந்து தினத்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு வேலைகளுக்கு வந்து செல்கின்றனர். தினத்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஒரு இருசக்கர வானகனத்தில் மூன்று நபர்கள் முதல் நான்கு நபர்கள் வரை அதிவேகத்தில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதே போல் நகரத்தின் முக்கிய சாலை,வீதிகள் மற்றும் புறவழிச்சாலையில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி  ஆகிய இடங்களில் இளைஞர்கள் பள்ளி மாணவிகளை கேலி கிண்டல் செய்வதும், இருசக்கர வாகனத்தை அதிவேகத்தில் செல்வது, இருசக்கர வாகனத்தில் ஒலி சத்தத்தை எழுப்புவது போன்ற செயல்களில் தொடர்ந்து இளைஞர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். இதுதொர்பாக பலமுறை  பாலக்கோடு காவல் நிலையத்திற்க்கு புகார் மனு அளித்தால் தொடர்ந்து இரண்டு நாட்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருசக்கர வாகன ஓட்டிகளிடம் எல்மெட் இல்லை, ஒட்டுனர் உரிமம் இல்லை என புகாரை பதிவு செய்து விட்டு செல்லுவதாகவும் இதனால் பள்ளி கல்லூரி மற்றும் முதியவர்கள், பொதுமக்கள் என சாலையை கடக்கும் போது விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. 

எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அதிவேகத்தில் இயக்கும் வானங்களை பறிமுதல் செய்யவும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!