Home செய்திகள் சினிமாவில் நாங்கள் செய்வது டுப்ளிகேட் காதல்..இதனை நம்பி நீங்கள் நிஜக்காதலில் இறங்க வேண்டாம்ந…டிகர் தாமு அறிவுரை..

சினிமாவில் நாங்கள் செய்வது டுப்ளிகேட் காதல்..இதனை நம்பி நீங்கள் நிஜக்காதலில் இறங்க வேண்டாம்ந…டிகர் தாமு அறிவுரை..

by ஆசிரியர்

சினிமாவில் நாங்கள் செய்வது டுப்ளிகேட் காதல்..இதனை நம்பி நீங்கள் நிஜக்காதலில் இறங்க வேண்டாம் என மாணவ-மாணவிகளுக்கு உசிலம்பட்டியில் நடைபெற்ற விழாவில் நடிகர் தாமு அட்வைஸ் செய்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தனியார் அமைப்பு சார்பில் 10-11-12ம் வகுப்பு படிக்கும் பள்ளி இறுதி பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் பயமில்லாமல் தேர்வு எழுவது குறித்து தேர்வைக் கொண்டாடுவேம் என்ற தலைப்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.உசிலம்பட்டி அரசுப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நடிகர் தாமு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளிடையே உரையாற்றினார்.விழாவில் அவர் பேசியதாவது. நீங்கள் பள்ளிக்கூடத்திற்கு சென்றீர்களா இல்லையா என்பது குறித்தும் ஆசிரியர்களை மதிக்கிறீர்களா என்பது குறித்தும் எந்த நடிகனும் உங்களை கேட்க போவதில்லை. சினிமாவில் நாங்கள் செய்வது டுப்ளிகேட் காதல்..பாட்டு பைட்டு அனைத்தும் டுப்ளிகேட்தான்..அங்கே அரிவா வெட்டுவோம்.அது அட்டைக்கத்தி..சினிமாவில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கண்முன் பள்ளி மாணவியை காதல் செய்து ஒருவன் கூப்பிட்டு போயிடுவான்.அது நிஜமான காதல் கிடையாது.சினிமா பொழுது போக்குகாகவும் வியாபாரத்திற்காகவும் எடுக்கப்படுகிறது. இதனை நம்பி நீங்கள் நிஜக்காதலில் இறங்க வேண்டாம்.உயிரேர்டு இருக்கும் கட்அவுட் பாலாபிஷேகம் பண்ணாதீங்க.உங்களுக்கு நீங்கள்தான் கதாநாயகன் எனப் பேசினார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com