Home செய்திகள் சிங்கப்பூரிலிருந்து மதுரை வந்த விமானத்தில் வந்த பயணிகள் குப்பைத்தொட்டியில் வீசிய 899 கிராம் தங்கம் மத்திய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவிவினர் மீட்பு

சிங்கப்பூரிலிருந்து மதுரை வந்த விமானத்தில் வந்த பயணிகள் குப்பைத்தொட்டியில் வீசிய 899 கிராம் தங்கம் மத்திய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவிவினர் மீட்பு

by mohan

மதுரை விமான நிலையத்திற்கு சிங்கப்பூரிலிருந்து பகல் 12 40 மணியளவில் மதுரை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில்119 பயணிகள் இறங்கி சென்றனர்.சிங்கப்பூரில் இருந்து மதுரை வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் மதுரைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து தீவிர சோதனையில் ஈடுபட்ட சுங்கஇலாகா வான் நுண்ணறிவு பிரிவினர்.விமானத்தில் வந்த 119 பயணிகளிடம் தீவிர சோதனையில் எந்தவித தங்கமும் சிக்கவில்லை .இதனை அடுத்து விமானத்தின் குப்பை கழிவுகளை சோதனை செய்வது வழக்கம்.அதன் பேரில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் குப்பைகளாக சேகரித்த நான்கு மூடைகளை ஆய்வு செய்தனர் .அதில் ஒரு மூடையில் ஸ்கேன் செய்து பார்த்தபோது பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நான்கு உருண்டைகள் கைப்பற்றப்பட்டது அதன் எடை 899 கிராம் ரூபாய் 56.50 லட்சம்மதிப்பு உள்ள தங்கப்பொருள் கைப்பற்றப்பட்டது.இதன் இந்திய மதிப்பு ரூபாய் 56.50 லட்சம் ஆகும் இதனைத் தொடர்ந்து சுங்க இலக்க வான் நுண்ணறிவு பிரிவினர் பயணிகளின் வருகை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தனர்.அதில் எந்தவித தகவலும் சிக்காததையடுத்து கைப்பற்றப்பட்ட தங்கத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.மதுரை விமான நிலையத்தில் தொடர்ந்து கடத்தல் தங்கம் இரண்டாவது முறையாக குப்பையில் வீசப்படுவது குறிப்பிடத்தக்கதுஒரு கிலோ தங்கம் குப்பையில் வீசப்பட்ட தகவலை அடுத்து மதுரை விமான நிலையம் பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!