தரமற்று, தூய்மையற்று கிடக்கும் கடலூர் நகராட்சி சாலைகள்..

கடலூர் பெருநகராட்சியில் உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடலூர் சன்னதி சாலை புகழ்பெற்ற ஸ்தலமான பாடலீஸ்வரர் திருக்கோயில் குளத்தின் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. அங்கே பெரிய அளவிலான பள்ளமும் உள்ளது.

இது சம்பந்தமாக நுகர்வோர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை, தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் ஒருங்கிணைப்பு உறுப்பினர் மற்றும் சமூக ஆர்வலர் வைத்தியநாதன் (9444834558) கூறுகையில், சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது அதே போல் சங்கர நாயுடுத்தெருவில் தமிழ்நாடு மெடிக்கல் கடை அருகே பாதாள சாக்கடை மற்றும் வாய்க்காலில் கழிவுநீர் வெளியேறி சாலைகளில் ஓடுவதால் வாகன ஓட்டிகள் ஷேர் ஆட்டோக்கள் மற்றும் பல வாகனங்கள் செல்லும்போது பள்ளங்களில் உள்ள கழிவுநீர் தமிழ்நாடு மெடிக்கல் மீதும் மற்ற பொதுமக்கள் மீது படும் நிலை உள்ளது.

அந்த பள்ளத்தையும் கழிவுநீர் தேங்கி நிற்கும் வாய்க்காலையும் சரி செய்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் ஆங்காங்கே தேங்கி இருக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். காலம் தாழ்த்தாமல் கடலூர் பெருநகராட்சி சரி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

அதே போல் கடலூர் நகராட்சி அரசு பள்ளி அருகே ரெட்டிச்சாவடி தெரு அருகே மழைநீருடன் சாக்கடை நீரும் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. மிகவும் மோசமான நிலையில் உள்ளது அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளி குழந்தைகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளார்கள் இவையெல்லாம் நகராட்சி கண்டுகொள்ளாமலே உள்ளது.

சாலை ஓரங்களில் கொட்டப்படும் குப்பைகள் சரிவர அள்ளப்படவில்லை எங்கு பார்த்தாலும் பள்ளங்களைத் தோண்டி அதை முழுமையாக சரி செய்யாமல் அப்படியே போட்டு வைத்திருக்கிறார்கள்.  நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் இப்பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும் என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தகவல்.அபுபக்கர்சித்திக்,

தொகுப்பு: அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர்

( பூதக்கண்ணாடி மாத இதழ்)- கீழை நியூஸ்