Home செய்திகள் குடியாத்தம் பகுதியில் தண்ணீர் என கள்ளச் சாராயத்தை குடித்து உயிரிழந்த காகங்கள்..??

குடியாத்தம் பகுதியில் தண்ணீர் என கள்ளச் சாராயத்தை குடித்து உயிரிழந்த காகங்கள்..??

by ஆசிரியர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் போடிப்பேட்டை, சீவூர் ஆற்றங்கரை ஓரப் பகுதிகளில் மணல் திருட்டு மணல் கொள்ளை அதிகமாக நடைபெறுகிறது.  மேலும் இந்தப் பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.  ஆற்றில் மணல் எடுப்பதால் இப்பகுதியில் குடி தண்ணீருக்கு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது,  மேலும் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு மிக அதிகமாக இருக்கிறது இதனிடையே இன்று குடியாத்தம் போடிபேட்டை ஆற்றங்கரையோரம் சில காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது.

இது குறித்து அப்பகுதியில் விசாரித்த பொழுது ஏற்கனவே காகங்கள் பல முறை இது போல் உயிர் இழந்துள்ளதாகவும் இங்கு கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெறுவதால் குடிமகன்கள் வீசிச் செல்லும் சாராயக் பொட்டலங்களில் உள்ள சாராயத்தை தாகத்திற்கு தண்ணீர் என்று அருந்தும் காகங்கள் உயிர் இழக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது இப்பகுதியில் மர்மமான முறையில் காகங்கள் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இது போன்ற வாயில்லா ஜீவன்களுக்கு வீட்டு மாடியில் குடிதண்ணீர் வைத்து காப்பாற்ற வேண்டும் என்றும் இப்பகுதியில் கள்ளச்சாராயத்தை காவல்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!