உசிலம்பட்டி அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் போட்டி..

உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பட்டர்பிளை நெட்வொர்க், பிராண்ட் பிலிம் பேக்டரி மற்றும் மதுரை மாஸ் மீடியா இணைந்து உசிலம்பட்டியில் கிராமப்புரம் கிரிக்கெட் வீரருக்கு இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 16 அணிகள் கலந்து கொண்டன.

இக்கிரிக்கெட் போட்டியை தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவர் சோலை எம் ராஜா மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி வாலாந்தூர் பாண்டி கிரிக்கெட் போட்டிகளை தொடங்கி வைத்தனர் இறுதிப் போட்டியில் மதுரை சர்வம் அணி வெற்றி பெற்றது உசிலம்பட்டி யங்ஸ் இரண்டாவது இடம் பெற்றது வெற்றி பெற்ற அணிக்கு கானா பட நாயகன் தர்சன் இயக்குனர் பொன்ராம் எம். ராஜேஷ் எம்.பி.கோபி ஆகியோர் பரிசு வழங்கினார்