Home செய்திகள் ராமநாதபுரத்தில் லோக் அதாலத்: 897 வழக்குகளுக்கு ரூ.10.48 கோடி தீர்வு தொகை

ராமநாதபுரத்தில் லோக் அதாலத்: 897 வழக்குகளுக்கு ரூ.10.48 கோடி தீர்வு தொகை

by mohan

இராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில்தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) இன்று நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுதலைவரும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான எஸ்.குமரகுரு தலைமை வகித்தார்.ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி முதுகுளத்தூர், கடலாடி, திருவாடானை, ராமேஸ்வரம் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சிவில், கிரிமினல், வாகன விபத்து, காசோலை சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி வாராக்கடன்கள், சிறு வழக்குகள் என 4 ஆயிரத்து 413 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில் 897 வழக்குகளுக்கு சுமூக தீர்வு எட்டபட்டு ரூ.10,47,82,204/ தொகை அறிவிக்கப்பட்டது.விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி பி.சி.கோபிநாத், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கே.கவிதா, மாவட்ட சட்டப்பணிகள் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சி.கதிரவன், நீதித்துறை நடுவர்கள் என்.நிலவேஸ்வரன் , ஜி.பிரபாகரன், கூடுதல் மகிளா நீதிபதி இ.வெர்ஜின் வெஸ்டா, வழக்கறிஞர் சங்கதலைவர் எஸ்.ஜெ.ஷேக் இப்ராஹிம் கலந்து கொண்டனர்.ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஊழியர்கள், நீதிமன்ற பணியாளர்கள் ஏற்பாடு செய்தனர்.

ஆர்.முருகன், செய்தியாளர், ராமநாதபுரம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!