கீழக்கரையில் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரிசோதனை முகாம்….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. இன்று (03/07/2020) கீழக்கரை நாடார் பேட்டை சுப்பிரமணி ஜெயலட்சுமி மெட்ரிகுலேஷன் பள்ளிய வளாகத்தில் கொரோனா பரிசோதனை முகாம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ் ராவ் உத்தரவின் பேரில் நடைபெற்றது.

இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு சுகாதாரத்துறை சார்பிலும் அனைத்து ஜமாத் மற்றும் அனைத்து சமுதாய சங்கங்கள் சார்பிலும் கேட்டு கொண்டுள்ளப்பட்னது. கீழக்கரை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், ஜமாத்தார்கள் அனைத்து மத சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர்.

கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு