Home செய்திகள் ராமநாதபுரத்தில் சிறப்பு கைத்தறி உடைகள் விற்பனை கண்காட்சி தொடக்கம்..

ராமநாதபுரத்தில் சிறப்பு கைத்தறி உடைகள் விற்பனை கண்காட்சி தொடக்கம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம், நவ.4- மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம், தமிழ்நாடு அரசு கைத்தறி துறை சார்பில் மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி துவக்க விழா ராமநாதபுரத்தில் நடந்தது. காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, முருகேசன் எம்எல்ஏ முன்னிலை வகித்தனர். கலெக்ர் விஷ்ணு சந்திரன் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு முதல் விற்பனையை துவக்கி வைத்தார். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் இக்கண்காட்சி நவ.3 முதல் நவ.9 வரை நடைபெறுகிறது. நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட, கைத்தறி ஆடைகளை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் இக்கண்காட்சியில் 25க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், சேலம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில், திருப்பூர், கும்பகோணம், திருச்சி, கோவை மாவட்டங்களில் இருந்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் இணைந்து பரமக்குடி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்து கைத்தறி உற்பத்தி பொருட்களை அரங்குகளில் அமைத்து பொதுமக்கள் பார்வையிட்டு தங்களுக்கு தேவையான கைத்தறி ஆடைகளை பெற்று செல்லும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பெட் ஷீட்கள், பட்டு சேலைகள், பட்டு வேட்டிகள், பருத்தி சேலைகள், துண்டுகள், சின்னாளப்பட்டி சேலைகள், பம்பர் சேலைகள், உயர்தர காட்டன் வேஷ்டிகள், அசல் பட்டு காட்டன் சேலைகள், லூங்கிகள் ஆகிய அனைத்து ஒரே இடத்தில் கிடைக்கும் வகையிலும் நுகர்வோர் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இந்த கைத்தறி ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக அரசு வாடிக்கையாளர்களுக்கு பருத்தி ரகங்களுக்கு ஆடை ஒன்று 30%, பட்டு ரகங்களுக்கு ரூ.300 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. சங்க கமிஷனாக ஆக 10% முதல் 30% வரை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற கண்காட்சி மூலம் மக்களிடம் கைத்தறி ஆடைகளுக்கு நல்ல வரவேற்பை பெற்றதுடன் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கண்காட்சியில் ரூ.65.89 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது. இக்கண்காட்சியில் அதிகளவு பொதுமக்கள் அரசு பணியாளர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள் வருகை தந்து கடந்த ஆண்டைவிட அதிகளவு விற்பனை பெருகின்ற வகையில் கைத்தறி ஆடைகள் வாங்கி நமது கைத்தறி நமது பாரம்பரியம் ” என்ற நிலையை உருவாக்கி நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்றிட உறுதுணையாக இருந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், தெரிவித்தார்.

கைத்தறித்துறை உதவி இயக்குநர் ரகுநாத், ராமநாதபுரம் நகர் மன்றத் தலைவர் கார்மேகம், பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது.கருணாநிதி, ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பிரபாகரன், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் சேஷய்யன், கோதண்டராமன், கைத்தறித்துறை ஆய்வு அலுவலர் ரெத்தின பாண்டி, கைத்தறி அலுவலர் லட்சுமி வெங்கட சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com