Home செய்திகள் கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் 2 வருடம் சிறை தண்டனை; அம்பை சார்பு நீதிமன்றம் தீர்ப்பு..

கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் 2 வருடம் சிறை தண்டனை; அம்பை சார்பு நீதிமன்றம் தீர்ப்பு..

by ஆசிரியர்

மணல் திருட்டை தடுக்கும் போது அவதூறாக பேசி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில், எதிரிக்கு 2 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ. 1000 அபராதம் விதித்து அம்பை சார்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 19.04.2018 -ஆம் ஆண்டு வீரவநல்லூர் ஒன்றாவது பகுதி கிராம நிர்வாக அலுவலரான குணசேகரன் தலைமையிலான அலுவலர்கள் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வீரவநல்லூர் பாரதியார் பள்ளி அருகே வீரவநல்லூர், கிளாக்குளம், சுப்பிரமணியசாமி கோவில் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் மகன் முருகன்(37) என்பவர் இருசக்கர வாகனத்தில் நான்கு மூட்டை மணலை ஏற்றிக் கொண்டு வந்துள்ளார். அவரை நிறுத்தி விசாரித்ததற்கு அவதூறாக பேசி அரிவாளால் தாக்க முயற்சி செய்து அரசு பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். இது குறித்து குணசேகரன் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், வீரவநல்லூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு முருகனை கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை அம்பாசமுத்திரம் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 22.08.2023 அன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் எதிரியான முருகனுக்கு 2 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எதிரிக்கு தண்டனை பெற்று கொடுத்த வீரவநல்லூர் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன் வெகுவாக பாராட்டினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com