Home செய்திகள் இராமநாதபுரத்தில் 24 மணி நேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறப்பு..

இராமநாதபுரத்தில் 24 மணி நேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறப்பு..

by ஆசிரியர்

இராமநாதபுரம், ஆக.28 –  இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் தொலைபேசி எண்ணுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் விஷ்ணு சந்திரன் துவக்கி வைத்தார்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் மக்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க ஏதுவாக 83001 75888 என்ற எண்ணை அறிமுகப்படுத்தினார்.

அவர் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்ட மக்கள் தங்கள் கோரிக்கைகள், குறைகளை தெரிவிக்க வசதியாக ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் மக்கள் குறை தீர் நாள் முகாம்களில் மனுக்களை அளித்து பயன்பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து மக்களிடம் பெறப்படும் மனுக்கள் பதிவுக்கான தாமதத்தை குறைக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையில் CALL YOUR COLLECTOR 83001 75888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிக்கப்படும் மக்களின் குறைகள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு மனுதாரருக்கு உரிய பதில் தாமதமின்றி கிடைக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு  1098, பேரிடர் மேலாண்மை 1077, சமூக நலன், மகளிர் உரிமைத்துறை  181, தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க 1950 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!