Home செய்திகள் நெல்லையில் “கப்பலோட்டிய தமிழன்” என்ற தலைப்பில் ஓவியப்போட்டி; பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு..

நெல்லையில் “கப்பலோட்டிய தமிழன்” என்ற தலைப்பில் ஓவியப்போட்டி; பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு..

by ஆசிரியர்

நெல்லையில் வ.உ.சி பிறந்த தினத்தை முன்னிட்டு ஓவியப் போட்டி நடந்தது. போட்டியில் நெல்லை மாவட்ட பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்த தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு “கப்பலோட்டிய தமிழன்” என்கிற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது. போட்டிக்கு நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தலைமை தாங்கினார். நீட் பவுண்டேஷன் அறக்கட்டளையின் அறங்காவலர் அகிலாண்டம் முன்னிலை வகித்தார்.

ஓவியப் போட்டியில் வி.எம். சத்திரம், ரோஸ்மேரி பப்ளிக் பள்ளி திருநெல்வேலி டவுண் அரசு மேல்நிலைப்பள்ளி, ராமச்சந்திர நகர் ரோஸ்மேரி மாடல் பப்ளிக் பள்ளி, குரு சங்கர் அரசு மேல்நிலைப்பள்ளி, சீவலப்பேரி அரசு உயர்நிலை பள்ளி, திசையன்விளை ஜெயராஜேஸ் மெட்ரிக் உயர்நிலை பள்ளி, புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி, குழந்தை ஏசு பள்ளி போன்ற 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த ஓவியப் போட்டியில் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் செப்டம்பர் 17ஆம் தேதி நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்வில் வழங்கப்பட உள்ளதாக அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்தி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!