
கீழக்கரையில் பல பகுதிகளில் கட்டுமானப்பணிகள் நடந்த வண்ணம் உள்ளது. ஆனால் கட்டுமானப் பணியில் ஈடுபடும் ஒப்பந்தக்காரர்கள் எந்த நிலையிலும் பொதுமக்களின் சிரமங்களைப் பற்றி சிறிது கூட கவலைப் படாமல் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதைகளிலும், வாகனங்கள் செல்லும் சாலைகளை ஆக்கிரமித்த வண்ணம்தான் கட்டுமானப் பொருட்களான கற்கள், மண்களை கொட்டிய வண்ணம் உள்ளனர்.
கீழே உள்ள படம் வடக்குத் தெரு தைக்காவில் இருந்து மதிக்கடை வழியாக செல்லும் சாலை, தினமும் ஆட்டோக்களும், பள்ளி வாகனங்களும் செல்லக் கூடிய சாலை, ஆனால் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் சாலையை மறித்து பொருட்களை கொட்டியிருப்பதை காணலாம். இது போன்ற சம்பவங்களை கீழைநியூஸ் இணையதளத்திலும் பல முறை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கு நகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்காத வரை இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியாது.
You must be logged in to post a comment.