இராமநாதபுரம் அரண்மனை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் ..

இராமநாதபுரம் அரண்மனை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று (02/04/2018) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் ஆட்சியின் போது ஆதி திராவிடர் மிகவும் பிற்படுத்தபட்டோர் பின் தங்கிய வகுப்பினருக்கு பாதுகாப்புக்கு கொண்டு வந்த சட்டத்தில், சிலவற்றை மத்திய பா.ஜ.க அரசு நீக்கி உள்ளது. இதை கண்டித்து இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு மாவட்ட தலைவர் தெய்வேந்திரேன் தலைமை வகித்தார், நகர் தலைவர் கோபி முன்னிலை வகித்தார், நிர்வாக உறுப்பினர் சேது பாண்டியன், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை எதிர்த்து கண்டன கோசம் எழுப்பப்பட்டன.

#Paid Promotion