Home செய்திகள் கோவில் பூசாரிகளுக்கு உதவித்தொகை வழங்கியது போல் மசூதி மற்றும் தேவாலயங்களில் பனியாற்றும் இமாம்கள் பாதிரியார்களுக்கும் வழங்க வேண்டும்:- தமிழக அரசுக்கு காங்கிரஸ் விவசாய அணி வேண்டுகோள்!

கோவில் பூசாரிகளுக்கு உதவித்தொகை வழங்கியது போல் மசூதி மற்றும் தேவாலயங்களில் பனியாற்றும் இமாம்கள் பாதிரியார்களுக்கும் வழங்க வேண்டும்:- தமிழக அரசுக்கு காங்கிரஸ் விவசாய அணி வேண்டுகோள்!

by Askar

கோவில் பூசாரிகளுக்கு உதவித்தொகை வழங்கியது போல் மசூதி மற்றும் தேவாலயங்களில் பனியாற்றும் இமாம்கள் பாதிரியார்களுக்கும் வழங்க வேண்டும்:- தமிழக அரசுக்கு காங்கிரஸ் விவசாய அணி வேண்டுகோள்!

காங்கிரஸ் விவசாய அணியின் மாநில பொதுச் செயலாளர் ஷேக்பரீத் விடுத்துள்ள அறிக்கையில்..

திருக்கோவில் அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்களுக்கு மேலும் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா நோய் தடுப்பு ஊரடங்கு காலத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் மாத சம்பளமில்லாமல் தட்டு காசு மட்டுமே பெற்று பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு நீட்டிப்பால் கோயில் அர்ச்சகர்களுக்கு மேலும் ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்து அறநிலைய துறைக்கு உட்பட்ட கோயில்களில் பணிபுரிபவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலகட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை காத்திடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் பங்குத்தொகை/தட்டுக்காணிக்கை மட்டுமே பெறும் 2,108 அர்ச்சகர்கள் / பட்டாச்சாரியார்கள் / பூசாரிகளுக்கும், ஒரு கால பூஜை நிதியுதவி பெறும் திருக்கோயில்களில் பணிபுரியும் 8,340 அர்ச்சகர்கள் / பட்டாச்சாரியார்கள் / பூசாரிகளும் அடங்குவர். மேலும் திருக்கோயில்களில் ஊதியமின்றி பங்குத்தொகை மட்டுமே பெற்றுக்கொண்டு பணிபுரியும் நாவிதர், பண்டாரம் / பண்டாரி, மாலைக்கட்டி, பரிச்சாரகர் / சுயம்பாகம், வில்வம், காது குத்துபவர் / ஆசாரி, நாமவளி, மிராசு கணக்கு, கங்காணி திருவிளக்கு, முறைகாவல் மேளம், நாதஸ்வரம், குயவர், புரோகிதர், தாசநம்பி போன்ற பணியாளர்களுக்கு ஏற்கனவே சிறப்பு நேர்வாக ரூ.1,000/- ரொக்க நிவாரணமாக வழங்கப்பட்டு விட்டது. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால், மேற்குறிப்பிட்ட பிரிவினருக்கு மேலும் ரூபாய் 1,000/- ரொக்க நிவாரணத் தொகையாக திருக்கோயில் நிதியிலிருந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் பூசாரிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவித்தொகை வழங்கிடும் தமிழக அரசின் மனிதநேய செயலை காங்கிரஸ் விவசாய அணியின் சார்பில் வரவேற்கிறேன்.

அதேபோன்று ஊரடங்கு உத்தரவால் வருமானமின்றி பாதிக்கப்பட்டிருக்கும் மசூதிகளில் பனியாற்றிவரும் ஆலிம்கள்,உலமாக்கள்,முஅத்தின்கள் உள்ளிட்டோருக்கும், கிறிஸ்தவ தேவாலயங்களில் பனியாற்றும் பாதிரிமார்கள் பேராயர்கள் உள்ளிட்டோருக்கும் உதவித்தொகையாக இரண்டாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!