Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கடன் தவனையை உடனே செலுத்த வேண்டும்..! மிரட்டும் தனியார் நிதி நிறுவனம்.. ஊழியர் நடவடிக்கை எடுக்குமா அரசு?

கடன் தவனையை உடனே செலுத்த வேண்டும்..! மிரட்டும் தனியார் நிதி நிறுவனம்.. ஊழியர் நடவடிக்கை எடுக்குமா அரசு?

by ஆசிரியர்

“கொரோனா நோய்” தடுப்பு நடவடிக்கைக் காரணமாக, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் சுயத்தொழில் செய்யும் சிறு, குறு, நடுதரத் தொழில் முனைவோர்களும், வணிகர்களும் மற்றும் இதுபோன்ற நிறுவனங்களில் பணிபுரிந்த தற்காலிக ஊழியர்களும், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் விவசாய பணியாட்கள் போன்றவர்கள் வருமானம் எதுவுமுன்றி மிகுந்த பொருளாதாரா நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், வங்கி சாரா தனியார் நிதி நிறுவனங்களில், இவர்கள் ஏற்கனவே வாங்கிருந்த தொழில் கடன், தனி நபர் கடன், மகளிர் குழு கடன் மற்றும் வாகனக் கடன் ஆகியவற்றின் மாதந்திரக் கடன் தவனையை உடனே செலுத்த வேண்டும் என்று, கடந்த ஒரு மாதக் காலமாக இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை, அந்நிறுவனங்களின் பணியாளர்கள் அலைபேசி மற்றும் SMS மூலம் தொடர்ந்து மிரட்டி அச்சுறுத்தி வருகின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் அனைவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஒரு சில இடங்களில் அடாவடி செய்த தனியார் நிதி நிறுவனங்களின் கலெக்சன் அதிகாரிகள் மீது காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அவர்களுடைய மிரட்டல்கள் நாடு முழுவதும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது.

மேலும், வாடிக்கையாளர்களின் காசோலைகளை எலக்ட்டரானிக் முறையில் வங்கிகளுக்கு அனுப்பி, அதை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும் வாடிக்கையாளர்களின் கணக்கில் போதிய பணம் இருப்பு இல்லையென்று அந்த காசோலைகளை பவுண்ஸ் செய்துள்ளதோடு, அதற்கு அபராதத் தொகையையும் பிடித்தம் செய்துள்ளனர்.

இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுகள் எதுவும் எங்களுக்கு பொருந்தாது என்றும், இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளை மதிக்க வேண்டி அவசியம் எங்களுக்கு இல்லையென்றும், எங்களுக்கு சம்பளம் கொடுக்கும் கம்பெனி அதிகாரிகள் என்ன சொல்கிறார்களோ, அதைதான் நாங்கள் செய்வோம் என்றும் படு திமிராகவே பேசிவருகின்றனர்.

இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாகமும் மற்றும் மத்திய நிதி அமைச்சகமும்தான் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!