இராமநாதபுரத்தில் காங்கிரஸ் சார்பில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது…..

இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பாரதி நகர் தனியார் திருமண மஹாலில் நடந்த இப்தார் நோன்பு விழாவில் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார்.  மேலும் இந்நிகழ்வுக்கு செல்லதுரை அப்துல்லா முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு நகர் தலைவர் கோபி,  வட்டார தலைவர் கோபால் ஆகியோர்களுடன்,  விழாவின் சிறப்பு அழைப்பாளர்களாக முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் MLA மற்றும் முன்னாள் அமைச்சர் சுப தங்கவேலன்,  திமுக மாவட்ட செயலாளர் சுப த திவாகரன் மற்றும் அகமது தம்பி, சாத்தான் குளம் ஜமாஅத் தலைவர் காபத்துல்லா, இராமேஸ்வரம் ராமகிருஷ்ன மடம் சாமிகள் பிரணவாணந்தா மற்றும் பங்குத்தந்தை அருளானந்து மற்றும் ஏராளமான முஸ்லீம் சமுதாய பெரியோர்களும் காங்கிரஸ் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியின் நிறைவாக ஆலம் அனைவரையும்  வரவேற்று  நன்றி கூறினார்.