19
இராமநாதபுரம், ஆக.5- இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி பூத் கமிட்டி முகவர்களின் பட்டியல் ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் கோபால் (எ) பி.ஆர்.என் ராஜா ராம் பாண்டியனிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட துணைத் தலைவர் வண்ணாங் குண்டு ரத்தினம், மாவட்ட பொதுச் செயலாளர் பெரியபட்டினம் முஹமது உசேன், மாவட்ட செயலாளர்கள் சையது இப்ராஹிம், தியாகராஜன், திருப்புல்லாணி வட்டார பஞ்சாயத்து ராஜ் தலைவர் பழனி, பெரியபட்டினம் நகர் தலைவர் மைதீன், வட்டார துணைத் தலைவர் சேகு, வண்ணங்குண்டு சாகுல் ஹமீது, வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் இஜாஸ் ஆகியோர் முன்னிலையில் திருப்புல்லாணி கிழக்கு வட்டார தலைவர் என்.சேது பாண்டியன் ஒப்படைத்தார். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.