Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட அளவிலான தென்னை கருத்தரங்கு…

தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட அளவிலான தென்னை கருத்தரங்கு…

by ஆசிரியர்

இராமநாதபுரம், அக்.10-  இராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய கூட்ட அரங்கில் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் மாவட்ட அளவிலான தென்னை கருத்தரங்கு இன்று நடந்தது. இராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம் வட்டாரங்களைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர். தென்னை பயிருக்கான தென்னை வளர்ச்சி வாரிய திட்டங்களை குறித்து  தென்னை வளர்ச்சி வாரிய இயக்குநர், அறவாழி தென்னையில் வேளாண்மைத்துறை திட்டங்கள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர் மத்திய திட்டம் பாஸ்கரமணியன்,  தென்னையில் உர மேலாண்மை குறித்து  வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணண்  பேசினர். தென்னையில் பூச்சி நோய் மேலாண்மை குறித்து வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் ராம்குமார், தென்னையில் மதிப்பு கூட்டுதல் தொழில் நுட்பங்களை குறித்து  பேராசிரியர் விஜயகுமார் எடுத்துரைத்தார்.

தென்னையில் கொப்பரை கொள்முதல் மூலம் அதிக விலை பெறுவது குறித்து, ராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் ராஜா பேசினார். தென்னை பயிரில் மண்வளம், மேலாண்மை குறித்து வேளாண்மை உதவி இயக்குநர், தரக்கட்டுப்பாடு நாகராஜன் பேசினார். தென்னை வளர்ச்சி வாரிய திட்டங்கள் பெறுவதற்கான வழிமுறைகளை தென்னை வளர்ச்சி வாரிய கள அலுவலர் முருகாளந்தம் எடுத்துரைத்தார். தென்னையில் சிவப்புக்கூன் வண்டு, வாடல் நோய் குறித்து ஆலோசகர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

தென்னையில் நீர் மேலாண்மை, இயற்கை வேளாண்மை குறித்து ராமநாதபுரம் வேளாண்மை உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ண்ண் பேசினார். தென்னை மரக்காப்பீட்டு திட்டம் குறித்து திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குநர், அமர்லால் தெரிவித்தார். தொழில் நுட்ப அலுவலர் பாரதி பிரியன் நன்றி கூறினார்.  கருத்தரங்கில் தென்னை விவசாயிகளுக்கு மாதிரி செயல் விளக்க திடல் மானிய விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!