Home செய்திகள் உலக மீன் வள விழிப்புணர்வு கருத்தரங்கு..

உலக மீன் வள விழிப்புணர்வு கருத்தரங்கு..

by ஆசிரியர்

இராமநாதபுரம், நவ.21 – மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் (ICAR-CIBA) சென்னை, மத்திய உயிரியல் தொழில்நுட்ப துறை (DBT) நிதி உதவியுடன் ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் கிராமத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த பன்னடுக்கு உவர் நீர் மீன் வளர்ப்பு முறை திட்டம் சார்பில் உலக மீன்வள வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு ரெகுநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று நடந்தது. பள்ளி தலைமையாசிரியை எஸ்.யுனைசி தலைமை வகித்தார். 

முதுகலை ஆசிரியர்கள் ரஹ்மத்துல்லா, சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தனர். கடல் மற்றும் மீன் வளம் குறித்து முடிவீரன்பட்டினம் JSCMWR கடல் ஆராய்ச்சி மைய இயக்குனரான விஞ்ஞானி ஜெ. செஸ் செரேபியா மாணவர்களிடம் உரை ஆற்றினார். மத்திய உவர்நீர் மீன்வளர்பு ஆராய்ச்சி நிலையம் (ICAR-CIBA). மத்திய உயிரியல் தொழில்நுட்பதுறை(DBT) நிதி உதவியில்  உவர்நீர் அலங்கார மீன்கள் மற்றும் மீன்தொட்டி பள்ளிக்கு வழங்கப்பட்டது. 73 பள்ளி மாணவ மாணவியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். திட்ட களப்பணியாளர் ஜே. தேவநாதன் ஏற்பாடு செய்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!