Home செய்திகள் அடகு வைத்த நகையை மீட்டு தரக்கோரி ராமநாதபுரம் எஸ்பியிடம் மீனவ பெண்கள் புகார்..

அடகு வைத்த நகையை மீட்டு தரக்கோரி ராமநாதபுரம் எஸ்பியிடம் மீனவ பெண்கள் புகார்..

by ஆசிரியர்

இராமநாதபுரம், அக்.11-  இராமநாதபுரத்தில் தலைமையிடம்,  பரமக்குடி, தொண்டி, திருப்பாலைக்குடி தங்கச்சிமடம் உள்பட இடங்களில் கிளைகளை கொண்டு ஒரு கோல்டு பைனான்ஸ் நிறுவனம் செயல்பட்டு வந்தது.

இந்நிறுவனம்  2013 ஆம் ஆண்டு அடகு நகை மோசடி செய்தது. இதில் ஏழை, எளிய மீனவ பெண்களை ஏமாற்றப்பட்டனர்.  இந்நிறுவனம் மீது காவல் துறை, நீதிமன்ற நடவடிக்கைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளது. சமரச தீர்வு மையம் ஏற்படுத்தி அதன் மூலம் அடகு நகைகளை சம்பந்தப்பட்டோரிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை  உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நகை அடகு தொகையை திரும்ப செலுத்தியோர், அடகு நகையை மீட்க பணம் செலுத்த தயாராக உள்ள வாடிக்கையாளர்கள் நிறுவன செயல்பாடு முடங்கியதால் பாதித்தோருக்கு அடகு நகை கிடைக்க துரித நடவடிக்கை எடுக்க கோரும் புகார் மனுவை கடல் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) மாவட்ட செயலாளர் எம். கருணாமூர்த்தி, மாவட்ட தலைவர் கணேசன் ஆகியோர் தலைமையில் 100 – க்கும் மேற்பட்டோர் எஸ்பியிடம் மனு கொடுத்தனர்.

சிஐடியு மாவட்ட நிர்வாகி செந்தில், மீனவ மகளிர் சங்க நிர்வாகி வில்லியம் ஜாய்சி, சீனிவாசன் மீன்பிடி சங்க மாவட்ட நிர்வாகி முருகவேல், பனைக்குளம் கருப்பையா, தங்கராஜ், பைனான்ஸ் நிறுவனத்தால் பாதித்த மீனவ மகளிர் காளிராணி, பொன்னுசெல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!