இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட அளவில் 40 வயதிற்கு மேற்பட்ட இரட்டையர் இறகு பந்தாட்ட போட்டி நடந்தது. 32 அணிகள் பங்கேற்ற போட்டியை மாவட்ட இறகு பந்தாட்ட கழக மாவட்ட செயலாளர் டி.பிரபாகரன் தொடங்கி வைத்தார். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சாத்தையா, ஜெயக்குமார் ஜோடி முதல் பரிசு வென்றனர். இராமநாதபுரம் மகேந்திரன், பெஞ்சமின் ஜோடி இரண்டாம் பரிசு, காரைக்குடி சசிக்குமார், இளமாறன் மற்றும் ஆர் எஸ்.மங்கலம் சக்தி, சக்திவேல் ஜோடி மூன்றாம் பரிசை தட்டி சென்றனர்.
தொண்டி பாலாஜி காஸ் ஏஜன்ஸி நிறுவனர் எம்.சசிக்குமார், வழக்கறிஞர் எம்.அசோக்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் டி.செல்வம், அண்ணாமலை நிதி நிறுவன இயக்குநர் கண்ணன், இராமநாதபுரம் செய்தியாளர் சங்கத் தலைவர் கி.தனபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் இறகு பந்து கழக செயலாளர் வழக்கறிஞர் ஏ.பாஸ்கரன், இணை செயலாளர் கே.வள்ளல் காளிதாஸ், பொருளாளர் வி.ஆறுமுகம் செய்தனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.