மண்டல அளவிளான நீச்சல் போட்டி தங்கம் வென்றார் இராமநாதபுரம் மாணவி…

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மண்டல அளவிலான நீச்சல் போட்டி விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலை., நீச்சல் குளத்தில் நடந்தது. இதில் ராமநாதபுரம் லூயிஸ் லெவல் மெட்ரிக் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி கீர்த்தனா 14 வயதிற்குட்பட்டோருக்கான 100 மீட்டர் மற்றும் 50 மீட்டர் பிரஸ்ட் பிரிவில் தங்கம், 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்.

இந்த வெற்றியின் அடிப்படையில் 2019 ஜன., 4 இல் நடைபெறவுள்ள மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் . பதக்கங்கள் குவித்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கும், லூயிஸ் லெவல் மெட்ரிக் பள்ளிக் கும் பெருமை சேர்த்த மாணவி கீர்த்தனாவை பள்ளி தாளாளர் சகாயமேரி, முதல்வர் அருள்மேரி, உடற்கல்வி ஆசிரியர் ஆனந்த பாண்டியராஜ் ஆகியோர் பாராட்டினர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.

#Paid Promotion