பொள்ளாச்சி பலாத்கார குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தல் – தூத்துக்குடியில் கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம்..

பொள்ளாச்சி பலாத்கார குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தல் – தூத்துக்குடியில் கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம். சமீபத்தில் பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி சம்பவத்தில் அனைத்து  உண்மையான குற்றவாளிகளையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கோரிக்கை வைத்து உள்ளனர். திமுக மகளிரணியினர்  செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் நேற்று பொள்ளாச்சியில் போலீஸ் தடையை மீறி போராட்டம் நடத்தப்பட்டது. இதையொட்டி கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் அரசியல் கட்சியினர் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்  தூத்துக்குடியில் உள்ள வவுசி மற்றும் மீன்வளக் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும், கொடுக்ககூடிய தணடனை இனி ஒருவன் தவறான வழியில் ஒரு பெண்ணை தொடுவதற்க்கு பயப்பட வேண்டும் ,அந்த அளவுக்கு இந்த தண்டனை இருக்க வேண்டும் என்று மாணவ,மாணவிகள் தெரிவித்தனர்.

போராட்டத்திற்க்கு SFI  மாவட்ட தலைவர் கார்த்தி்க், மாவட்ட செயலளார் மாரிசெல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர், போராட்டத்தில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று  குற்றவாளிகளை தூக்கிலிடக் கோரி  கோஷமிட்டனர். தகவலறிந்து வந்த தென்பாகம் ஆய்வாளர்  தீன் குமார் மற்றும் போலீசார் ,மாணவ மாணவிகளிடம் பேசியதையடுத்து  மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனர்.