கௌசானல் கல்லூரியில் ஐம்பெருவிழா…

கௌசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 06-08.09.2018 ஆகிய மூன்று நாட்களும் உணவுத் திருவிழா, இளைஞர் தினவிழா, கலையரங்கத் திறப்பு விழா, ஆசிரியர் தினவிழா, முன்னாள் மாணவர் சந்திப்பு என ஐம்பெரும் விழாவாக  சிறப்புறக் கொண்டாடப்பெற்றது.

​06.09.2018 அன்று கல்லூரியில் உணவுத் திருவிழா நடைபெற்றது. உணவுத் திருவிழாவினைக் கல்லூரிச் செயலரும் முதல்வரும் தொடங்கி வைத்தனர். உணவுத் திருவிழாவில் பல்வேறு துறைகளைச் சார்ந்த மாணவர்களும் தாங்களாகவே உணவுகளைத் தயாரித்தனர். மாணவர்களால் தயாரிக்கப்பெற்ற உணவுகளைப் பேராசிரியர்களும் மாணவர்களும் வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.

07.09.2018 அன்று இளைஞர் தினவிழாவின் தொடக்கமாகச் சிறப்பு விருந்தினர், கல்லூரிச் செயலர், கல்லூரி முதல்வர், அருட்சகோதரர்கள் குத்துவிளக்கினை ஏற்றிவைத்து நிகழ்வினைத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து கல்லூரி மாணவிகள் வரவேற்பு நடனமாடினர். உயிர் வேதியியல் துறையின் மூன்றாமாண்டு மாணவி இரா.கௌசல்யா வரவேற்புரை ஆற்றினார். திரு இருதய சபையின் ஆலோசகர் மற்றும் புனித ஜோசப் மேனிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் அருட்சகோ ஏ.எஸ்.ஞானபிரகாசம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, “இன்று இந்தியத் தீரநாட்டில் 70 கோடி இளைஞர்கள் உள்ளனர். மிகுதியான எண்ணிக்கையைக் கொண்ட இளைஞர்கள் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து வெற்றிபெற்றது போன்று கண்ணியத்தோடும் உத்வேகத்தோடும் செயலாற்றினால் நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுசெல்ல முடியும்” எனச் சிறப்புரையாற்றி, இளைஞர் தினத்திற்காக நடத்தப்பெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

கல்லூரிச் செயலர் அருட்சகோ. முனைவர் என்.எஸ்.ஜேசுதாஸ் அவர்களும் கல்லூரி முதல்வர் திருமதி கு.ஹேமலதா அவர்களும்; வாழ்த்துரை வழங்கிää போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினர். புனித ஜோசப் விடுதியின் இயக்குனர் அருட்சகோ. கிறிஸ்டோபர் புனித மரியன்னை விடுதியின் இயக்குனர் அருட்சகோ. மைக்கில் தங்கராஜ் நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்வில் கணிதவியல் துறை இரண்டாமாண்டு மாணவி சௌமியா வரதட்சணை கொடுமைகள் குறித்தும் கணினிப் பயன்பாட்டியல் முதலாமாண்டு மாணவன் கோபிநாத் நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு குறித்தும் பேசினார்.

அழியும் விளிம்பில் உள்ள நாட்டுப்புறக் கலைகள், பாலியல் வன்கொடுமை, வரதட்சணை ஒழிப்பு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு, விவசாயம் காப்போம், கைபேசியின் நன்மை தீமைää பிளாஸ்டிக் ஒழிப்பு, மதுவிலக்கு, பாரம்பரிய வாழ்க்கை, வாக்குரிமை எனப் பல்வேறு துறைகளும் தங்களுக்கென ஒரு பொருண்மையில் கலை நிகழ்ச்சிகளை வழங்கினர். இறுதியாகக் கல்லூரி துணை முதல்வர் திரு ம.ஹரிபிரகாஷ் அவர்கள் நன்றியுரை நவின்றார். இறுதியாக ஆங்கிலத் துறை முதுகலை இரண்டாமாண்டு மாணவி பி.திஸ்மா நன்றியுரை நவின்றார். 08.09.2018 அன்று 10.30 மணியளவில் கல்லூரியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆஞ்சலோ கலையரங்கினைத் இருதய சபையின் அதிபர் அருட்சகோ. வேளாங்கண்ணி அவர்கள் திறந்து வைத்தார். பின்னர் ஆசிரியர் தினவிழாவில் ஆசிரியர்களின் அறப்பணிகள் குறித்து உரையாற்றி வாழ்த்துரை வழங்கினார். கல்லூரிச் செயலர் அருட்சகோ. முனைவர் என்.எஸ்.ஜேசுதாஸ் கலையரங்கில் பெயர்தாங்கிய இருதய சபையின் துணை நிறுவனர் அருட்சகோ. ஆஞ்சலோ வாழ்க்கை குறித்துப் பேசினார்.

தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள், கல்லூரிச் செயலர், முதல்வர் குத்துவிளக்கினை ஏற்றிவைத்து நிகழ்வினைத் தொடங்கி வைத்தனர். கல்லூரி துணை முதல்வர் திருமதி தி.மகாலெட்சுமி வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து முதல்வர் திருமதி கு.ஹேமலதா அவர்கள் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்துவைத்து அறிமுக உரையாற்றினார். திரைப்பட இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி வாழ்ந்தால் வெற்றிபெறலாம் ஒவ்வொரு மாணவனின் வெற்றியிலும் ஆசிரியர்களின் பங்கு உண்டு எனக் கூறி சிற்ப்புரையாற்றினார். திரு இருதய சபையின் கல்வி பணியணைக் குழு பொதுச் செயலர் அருட்சகோ. டி.கஸ்பர் அவர்களும் திரு இருதய சபையின் பொது நிதியர் அருட்சகோ. எம்.கிறிஸ் தாமஸ், இருதய சபையின் பொது ஆலோசகர் மற்றும் புனித வளனார் மேனிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் அருட்சகோ. ஏ.எஸ்.ஞானபிரகாசம், முத்துப்பேட்டை பங்குத்தந்தை அந்தோனிராஜ்  கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அனைத்து நிகழ்ச்சிகளையும் கல்லூரி மாணவிகள் செம்மையுறத் தொகுத்து வழங்கினர். 08.09.2018 அன்று நண்பகல் 2.00 மணிக்கு முன்னாள் மாணவர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சுமார் 350 பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.