Home செய்திகள் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில்,கணிதத் துறை சார்பில் வலைத்தள கருத்தரங்கு கூட்டம்.

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில்,கணிதத் துறை சார்பில் வலைத்தள கருத்தரங்கு கூட்டம்.

by mohan

துறையூர் அருகே புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் கணிதத் துறை (சுயநிதிப்பிரிவு) சார்பில் மாநில அளவிலான வலைத்தள கருத்தரங்கு கூட்டம் (09/05/2022) நடைபெற்றது.இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பாரதியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கணிதத்துறை பேராசிரியர் முனைவர் M.சுவிந்திரா அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்.இந்நிகழ்வில் நம் வாழ்வியலில் கணிதத்தின் முக்கியத்துவம் குறித்தும்,அதன் சிறப்பு குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.மாணவர்கள் கணிதத் துறையை தேர்ந்தெடுத்ததன் மூலம் எதிர்காலத்தில் அவர்கள் பயன்பெறக்கூடிய வேலைவாய்ப்புகள் குறித்தும்,கணிதத் துறையில் மாணவர்கள் மேம்படுவதற்குரிய வழிமுறைகள் குறித்தும் சிறப்பாக எடுத்துரைத்தார்.இந்நிகழ்வின் தொடக்கத்தில் கணிதத் துறை தலைவர் திருமதி பா.பாக்கியலெட்சுமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.அதனைத் தொடர்ந்து கல்லூரியின் தலைவர் திரு.பொன்.பாலசுப்ரமணியன் தலைமையுரை வழங்கி சிறப்பித்தார்.கல்லூரி செயலர் திரு பொன் இரவிச்சந்திரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.மேலும் கல்லூரியின் முதல்வர் முனைவர் திரு அ.ரா .பொன்பெரியசாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கி பெருமை சேர்த்தார்.அதனைத்தொடர்ந்து சுயநிதிப்பிரிவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மீனாட்சிசுந்தரம் அவர்கள் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார்.இந்நிகழ்வின் முடிவில் கணிதத்துறை பேராசிரியர் சி.ஹேமலதா அவர்கள் நன்றியுரை வழங்கினார் .இக்கருத்தரங்கு கூட்டத்தை கணிதத் துறையின் பேராசிரியர் C.ஹேமலதா அவர்கள் ஏற்பாடு செய்தார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com