Home செய்திகள்உலக செய்திகள் தனது கனவுகளில் தேசத்தின் கட்டமைப்பில் மிகப்பெரும் பங்கு வகித்த பாரத்ரத்னா ஜே.ஆர்.டி.டாடா நினைவு தினம் இன்று (நவம்பர் 29, 1993).

தனது கனவுகளில் தேசத்தின் கட்டமைப்பில் மிகப்பெரும் பங்கு வகித்த பாரத்ரத்னா ஜே.ஆர்.டி.டாடா நினைவு தினம் இன்று (நவம்பர் 29, 1993).

by mohan

ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா (Jehangir Ratanji Dadabhoy Tata) பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தில் பிறந்தார். இவர் ரத்தன்ஜி தாதாபாய் டாடாவின் மகன் ஆவார். இவர் இவரது தாயார் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர் ஆதலால் இவர் தனது சிறுவயதில் பிரான்சிலேயே வாழ்ந்தார். பிரான்ஸ் ராணுவத்தில் இணைந்து பணியாற்றவும் செய்தார் அங்கிருக்கிற பொழுது எண்ணற்ற சாகசங்களில் விருப்பம் கொண்டவராகவும் இருந்தார். எனினும்,அவரின் தந்தை, “போதும் நீ அங்கிருந்து வா!” என்று அழைத்துக்கொண்டார். அப்படி அவர் அழைத்ததால் தான் ஜே.ஆர்.டி நமக்கு கிடைத்தார். அதற்கு பின் அவர் சார்ந்திருந்த படைப்பிரிவு மொராக்கோவில் நடந்த போரில் முழுமையாக அழிக்கப்பட்டது. கேம்ப்ரிட்ஜில் பொறியியல் படிக்கலாம் என்று மீண்டும் ஆர்வம் மேலிட போனார். மீண்டும் அப்பா டாடா நிறுவனத்தில் வேலைக்கு சேர அழைத்துக்கொண்டார். டாடா ஸ்டீல் நிறுவனத்தில் சம்பளம் பெறாத தொழில் பழகுநராக சேர்ந்தார். தொழில் நுணுக்கங்களை விரைவாக அறிந்துகொண்டார். பல்கலையில் படிக்கவில்லை என்கிற வருத்தம் இறுதிவரை ஜே.ஆர்,டி. டாட்டாவுக்கு இருக்கவே செய்தது.

இளம் வயதில் பிரான்ஸ் தேசத்தில் இருந்த பொழுது விண்ணில் விமானத்தில் பறப்பதன் மீது காதல் கொண்டார். அவர் இந்தியாவின் முதல் விமானி ஆனார். 1929ல் இவர் இந்தியாவின் முதல் வானூர்தி ஓட்டுனர் உரிமம் பெற்றார். இந்தியாவில் டாடா ஏர்லைன்ஸ் விமான சேவையை 1932ல் தொடங்கினார். நாட்டின் மிகப்பெரிய தொழில் குழுமமான டாடா ஸ்டீல் குழுமத்தின் தலைவராக 34வது வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டார். திறமையான இளைஞர்களைக் கண்டுபிடித்து அவர்களை தன் நிறுவனத்துக்கு அழைத்துவந்து, முக்கிய பொறுப்புகளை ஒப்படைத்தார். இதுவே இந்நிறுவனத்தின் அபார வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணமாக இருந்தது. நாடு சுதந்திரம் பெற்றவுடன், பிரதமர் நேருவுடன் இணைந்து இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தார். 53 ஆண்டுகள் தலைமைப் பொறுப்பில் இருந்து நிறுவனத்தை வழிநடத்தினார். அவர் பொறுப்பேற்றபோது 14 நிறுவனங்களைக் கொண்டிருந்த குழுமம், 50 ஆண்டுகளில் 97 நிறுவனங்களாக வளர்ச்சி அடைந்தது. தொழில் நிறுவனம் என்றாலே இந்தியர்களுக்கு நினைவு வரும் சொல் ‘டாடா’. அந்த அளவுக்கு முன்னணி நிறுவனமாக டாடா குழுமத்தை உருவாக்கினார். டாடா நிறுவனத்தில் தலைமைப்பொறுப்புக்கு வந்த பின்னர் அவர் உருவாக்கிய டாடா ஏர்லைன்ஸ் நிறுவனம் தான் இந்தியாவின் ஏர் இந்தியாவாக உருவெடுத்தது. தொழிலாளிகள் வீட்டை விட்டுக்கிளம்பும் பொழுதில் இருந்து அவர்கள் மீண்டும் வீடு போய் சேரும் வரும்வரை பணியில் இருப்பதாகவே கருதப்படுவார்கள் என்கிற நடைமுறையை கொண்டு வந்த பல தொழிலாளர்களின் வாழ்வில் ஸ்திரத்தன்மையை உண்டு செய்தவர். இன்றைக்கு கலக்கும் ஏர் இந்தியா, ஏர் இந்தியா இன்டர்நேஷனல் நிறுவனங்கள் உருவாகக் காரணமாக இருந்தவர். டிசிஎஸ், டைட்டன், டாடா மோட்டார்ஸ் எல்லாமே இவரது கனவில் உதித்தவைதான். நாடு சுதந்திரம் பெற்றவுடன், பிரதமர் நேருவுடன் இணைந்து இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தார். 53 ஆண்டுகள் தலைமைப் பொறுப்பில் இருந்து நிறுவனத்தை வழிநடத்தினார். அவர் பொறுப்பேற்றபோது 14 நிறுவனங்களைக் கொண்டிருந்த குழுமம், 50 ஆண்டுகளில் 97 நிறுவனங்களாக வளர்ச்சி அடைந்தது. இன்றைய இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி டாடாவில் தான் வேலை பார்த்தார். அவர் டாட்டாவை விட்டுக்கிளம்பும் பொழுது ஜே.ஆர்.டி. அவரை அழைத்தார், “சுதா! சமூகம் நமக்கு எவ்வளவோ தந்திருக்கிறது. அதனால் நாம் பலனடைந்து இருக்கிறோம் அதை நாம் கண்டிப்பாக திருப்பி செலுத்த வேண்டும்.” என்றார். அதன் தாக்கத்தில் தான் இன்போசிஸ் அறக்கட்டளை எழுந்தது. தன்னுடைய பெயரில் ஒரு சொத்தைக்கொண்டு இறுதிவரை அவர் கொண்டிருக்கவில்லை. வீட்டைக்கூட தன்னுடைய பெயரில் பதிவு செய்து கொள்ளாத எளிமை அவரிடம் இருந்தது. இந்திய அரசு குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே அதை தீவிரமாக முன்னெடுத்து நடத்தினார் அவர். பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு நடந்த பாராட்டு விழாவில் அவர் சொன்ன வரிகள் தான் அவரின் சிந்தனை பாய்ந்த விண்ணை போல போல நம் தேசத்தின் எல்லாரின் சிந்தையிலும் வியாபித்து இருக்கவேண்டும். அந்த வரிகள் -”இந்தியா ஒரு பொருளாதார வல்லரசாக வேண்டாம்; இந்த நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்வோடு, தன்னிறைவோடு வாழ்கிற தேசமாக இந்த பூமி ஆனால் போதும்!” என்றார். இந்தியாவின் முதன்மையான தொழிலதிபரும், தேசத்தின் கட்டமைப்பில் பெரும் பங்கு வகித்தார். தொழில் நிறுவனம் என்றாலே இந்தியர்களுக்கு நினைவு வரும் சொல் ‘டாடா’. அந்த அளவுக்கு முன்னணி நிறுவனமாக டாடா குழுமத்தை உருவாக்கினார். இந்தியாவிலும் உலக அளவிலும் பல விருதுகள், கவுரவங்களைப் பெற்றுள்ளார். 1992-ல் இவருக்கு ‘பாரத ரத்னா’ வழங்கப்பட்டது. இந்த விருது பெற்ற முதல் தொழிலதிபர் இவர்தான். நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்வோடு, தன்னிறைவோடு வாழ்கிற தேசமாக இந்திய பூமி விளங்க வேண்டும் என்று விரும்பியவர். இந்திய தொழில் துறை, பொருளாதாரத்துக்கு அளப்பரிய பங்களிப்பு செய்த சாதனை மனிதர் ஜே.ஆர்.டி. டாடா நவம்பர் 29, 1993ல் தனது 89வது அகவையில் இத்தாலியின் வெனிஸ் நகரில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். Source By: Wikipedia, Hindutamil, Vikatan. தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!