Home செய்திகள் கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதார மேம்பாடு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் கள ஆய்வு..

கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதார மேம்பாடு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் கள ஆய்வு..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் 02.08.2018 அன்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

​தமிழக அரசானது கிராமங்களின் அடிப்படை தேவையான குடிநீர் விநியோகம், தெருவிளக்கு வசதி, சாலை வசதி பொது கழிப்பறைகள் பயன்பாட்டு நிலவரம் மற்றும் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் பயன்படுத்தகூடிய நிலையிலான கழிப்பறை வசதி ஆகியவற்றை உறுதி செய்வதற்கு கிராமங்கள்தோறும் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பவும், ஆய்வின் மூலம் கண்டறியப்படும் குறைபாடுகளை உடனுக்குடன் சரிசெய்யவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து உட்கடை கிராமங்களிலும் மேற்காணும் அடிப்படை வசதிகளின் தற்போதைய நிலவரம் குறித்து சிறப்பு அலுவலர்கள் மூலம் நேரில் ஆய்வு செய்து புள்ளி விபரம் தயார் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டறியப்பட்ட புள்ளி விபரங்கள் மற்றும் பிற திட்டப்பணிகள் செயலாக்கம் குறித்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஊராட்சி ஒன்றியம் வாரியாக தினந்தோறும் ஆய்வு செய்து வருகிறார். குறிப்பாக தெருவிளக்கு வசதியின் உண்மை நிலவரம் குறித்து இரவு நேரங்களில் கிராமங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார். இதனை தொடர்ந்து இன்று கடலாடி ஒன்றியத்திற்குட்பட்ட ஏர்வாடி கிராமத்தில் உள்ள ஏர்வாடி தர்ஹாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சந்தனக்கூடு திருவிழா கால சுகாதார ஏற்பாடுகளை ஆய்வு செய்வதுடன், அங்குள்ள மனநலக்காப்பகத்திலும் ஆய்வு செய்தார்.

​மேலும் மேலகிடாரம் கிராமத்தில் ஆய்வுக்கு சென்றபோது அங்குள்ள குடிநீர் விநியோகம் மற்றும் பொதுகட்டிடங்களின் கழிப்பறை வசதி ஆகியவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மேலகிடாரம் கிராமத்தில் தற்போது பொதுமக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் பழைய திறந்தவெளி கிணறுகள், கூடுதல் தேவைக்காக தற்போது ரூ.4.00 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி கிணறு மற்றும் டாடா டிரஸ்ட் நிறுவனத்தின் பங்களிப்பின் மூலம் ரூ.18.00 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் RO PLANT-க்கான கட்டுமான பணியையும் ஆய்வுச் செய்தார். RI PLANT-அமைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி 10 தினங்களுக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)-யிடம் அறிவுரை வழங்கினார்.

​இந்த ஆய்வின்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் காவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் செயற்பொறியாளர் மாரி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செல்லத்துரை உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!