இராமநாதபுரத்தில் குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்..

இராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. ராமநாதபுரம் சார்பு நீதிபதி ராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மூலம் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது நம்  அனைவரது கடமையாகும். பேருந்து  நிலையங்கள் ரயில் நிலையங்கள், வார சந்தைகள் போன்ற இடங்களில் பெண் குழந்தை  பாதுகாப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்கள் தொடர்ந்து கல்வி கற்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தை திருமணம் தடைச்சட்டம், பாலியல் குற்றங்களி இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்து குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  பள்ளிக்குழந்தைகளுக்கு தற்காப்பு பயிற்சி, மன அழுத்தத்தில் இருந்து விடுபட பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குழந்தை பராமரிப்பு இல்லங்களை ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் இவ்வாறு கூறினார்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்ணன், சமூகநல அலுவலர் குணசேகரி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கேசவதாசன், மாவட்ட கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்