Home செய்திகள் தென்னை மரத்திற்கு காப்பீடு…

தென்னை மரத்திற்கு காப்பீடு…

by ஆசிரியர்

தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளை அன்போடு அழைக்கிறோம் என்ற வாழ்த்துகளோடு தென்னை மரத்திற்கு காப்பீடு செய்யும்முறை குறித்து கடலாடி வேளாண்மை உதவி இயக்குநர் செ.இராஜேந்திரன் கூறியதாவது. வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல், தீ விபத்து மற்றும் இயற்கை சீற்றங்களால் தென்னை மரம் முழுமையாகவோ அல்லது முற்றிலும் பலம் கொடுக்காத நிலை ஏற்பட்டலோ இத்திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படுகிறது.

தென்னையை தனி பயிராகவும், ஊடு பயிர், வரப்பில், வீட்டுத்தோட்டம் என குறைந்த பட்சம் 5 மரங்களாவது இருக்க வேண்டும்.ஆண்டுக்கு 30 காய்களுக்கு மேல் மகசூல் தரக்கூடிய மரங்களை இத்திட்டத்தில் சேர்க்கலாம்.

ஒரு எக்டருக்கு சுமார் 175 மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய தகுதியாகும்.மரங்களின் எண்ணிக்கைääவயது மற்றும் பராமரிப்பு பற்றிய சுய உறுதி முன் மொழிவு அளிக்க வேண்டும்.மரத்தின் வயது 4 அல்லது 7 முதல் 15 வயது வரை உள்ளவற்றிற்கு ரூ.2.25 ம், 16 முதல் 60 வயது உள்ளவற்றிற்கு ரூ.3.50 செலுத்த வேண்டும்.மேலும் விவரங்களுக்கு கடலாடி வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அவர் கூறினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!