Home செய்திகள் கடலாடி வனப்பேச்சியம்மன் கோயிலில் மாட்டு வண்டிப்பந்தயம்…

கடலாடி வனப்பேச்சியம்மன் கோயிலில் மாட்டு வண்டிப்பந்தயம்…

by ஆசிரியர்

கடலாடி சமத்துவபுரம் அருகே வனப்பேச்சியம்மன், ராக்காச்சி அம்மன்கோயிலில் 9ம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு 4 பிரிவுகளாக மாட்டுவண்டிப்பந்தயம் நடந்தது. பூஞ்சிட்டு, சின்னமாடு,நடுமாடு, பெரியமாடு என்ற பிரிவுகளில் நடந்தது. வனப்பேச்சியம்மன் (கடலாடி) முதல் ஒப்பிலான் வரையுள்ள 7 கி.மீ., தொலைவிற்குபெரிய மாடுகள் போட்டியில் 6 மாடுகள் பங்கேற்றன.

இப்போட்டியில் சித்திரங்குடி ராமமூர்த்தி முதலிடத்தையும், திருநெல்வேலி கடம்பூர் கருணாகர ராஜாஇரண்டாமிடத்தையும், மருதுõர் நாச்சியார் மூன்றாமிடத்தையும்பிடித்தனர்.

நடுமாடுகள் பிரிவு: 5 கி.மீ., துõரம் நடந்த போட்டியில் 14 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. திருநெல்வேலி கடம்பூர் கருணாகர ராஜா முதலிடத்தையும், மதுரை மேலுõர் மாடுகள் இரண்டாமிடத்தையும்,தங்கம்மாள்புரம் கார்த்திக் மூன்றாமிடத்தையும் பிடித்தது.

சின்னமாடுகள் பிரிவு: 4 கி.மீ., தொலைவிற்கு நடந்த பந்தயத்தில் ஆப்பனுõர் வேல்முருகன் முதலிடத்தையும், எ.பாடுவனேந்தல் மாணிக்கவள்ளி இரண்டாமிடத்தையும், எம்.கரிசல்குளம் வனப்பேச்சியம்மன் மூன்றாமிடமும் பிடித்தது.

பூஞ்சிட்டு மாடுகள் பிரிவு: 3 கி.மீ., தொலைவிற்கு நடந்த போட்டியில் துõத்துக்குடி சிந்தலக்கட்டை ராஜேஸ் முதலிடமும், ஒச்சதேவன் கோட்டை தங்கராஜ் இரண்டாமிடமும், எ.பாடுவனேந்தல் மகாதேவி மூன்றாமிடமும் பிடித்தனர்.

நான்குபிரிவுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டின் உரிமையாளர்களுக்கும் வண்டி ஓட்டிய சாரதிகளுக்கு ரொக்கப்பரிசுகளும், குத்துவிளக்கு, அண்டா, உள்ளிட்ட ஏராளமான பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!