முதல்வர் மறைந்து வருடங்கள் கடந்து விட்டன.. துக்கத்தால் இறந்தவர்களுக்கு இதுவரை அறிவித்த நிவாரண தொகை கிடைக்கவில்லை ..

முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்து ஒரு வருடமானாலும் அவர் இறந்த துக்க செய்தி கேட்டு மரமணடைந்த அவரது தொண்டர்களுக்கு கட்சி நிவாரணத் தொகை கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர் அவரது குடும்பத்தினர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூதிப் புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (55). மனைவி பெயர் பாண்டியம்மாள் (50). இவருக்கு 2 பெண், 1 ஆண், பிள்ளைகள் உள்ளனர். இவர் கடந்த 1990 முதல் பூதிப்புரம் கிளைச் செயலாளராக உள்ளார். கட்சி தீவிர தொண்டரான இவர் கடந்த வருடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதே மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் அம்மா இறந்த செய்தியை டிவியில் பார்த்து பெரும் சோகத்திலிருந்தவர் டிசம்பர் 6ம் தேதி நள்ளிரவில் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மறைவுக்கு உள்ளுர் கட்சி நிர்வாகிகள் வந்த போதிலும் பெரிய தலைவர்கள் யாரும் வரவில்லை என கூறப்படுகிறது. இவருடைய மகன் சக்கரை பாண்டி (35) தற்போது தனது தாயார் பாண்டியம்மாளுடன் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இவர்கள் குடும்பத்திற்கு அதிமுக கட்சி சார்பில் இதுவரை எந்த வித உதவியும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. வறுமையில் வாடும் அதிமுக தொண்டரான இவரது குடும்பத்திற்கு கட்சி சார்பில் நிதியுதவி வழங்க வேண்டுமன கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி. ஜெ.அஸ்கர், திண்டுக்கல்