Home செய்திகள் தமிழக மீனவர் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: கடந்த 9 ஆண்டில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி..

தமிழக மீனவர் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: கடந்த 9 ஆண்டில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி..

by ஆசிரியர்

இராமநாதபுரம், ஆக.18- ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் நடந்த மீனவர் நல சந்திப்பு மாநாடு நடந்தது இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: 

தமிழக மீனவர் மீது இலங்கை கடற்படையினர் தாக்கு, கைது நடவடிக்கையை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.  இலங்கையில் தமிழர் உரிமை போராட்டம் எப்போது தொடங்கியதோ, அப்போதிருந்தே, தமிழக மீனவர் தாக்கப்படுவதை இலங்கை அரசு வழக்கமாக கொண்டுள்ளது. ,2014ல் பாஜக ஆட்சி அமைந்ததற்கு பின்னர் தான் அடக்குமுறைகள் இன்னும் அதிகரித்துள்ளது. கைது, தாக்குதல், சிறைப்பிடிப்பு சம்பவங்களை தாண்டி, மீனவர்களின் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான படகுகளை இலங்கை அரசு பறித்துச் செல்வது அதிகரித்துள்ளது. 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன், பாம்பனில் பாஜக சார்பில் கடல் தாமரை போராட்டம் நடந்தது. பாஜக ஆட்சி அமைந்தால் கச்சத்தீவு மீட்கப்படும். மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என சுஷ்மா சுவராஜ் (மறைவு) என சொன்னார். கடந்த 9 ஆண்டு காலத்தில் இது நடந்திருக்கிறதா? ராமநாதபுரத்தில் 2014 ஏப்ரல் மாதம் பிரதமர் நரேந்திர மோடி பேசியது என்ன? இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் துன்புறுத்தப்படுவதும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும் தினமும் நடந்து வருகிறது. இதற்கு காங்கிரஸ் அரசின் பலவீனம் தான் காரணம் என்று சொன்னார். கடந்த 9 ஆண்டு பாஜக ஆட்சியில் தமிழக மீனவர் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படவே இல்லையா? மீனவர்கள் பாதுகாப்பாக வாழவேண்டும் எனில், இந்தியாவில் வலுவான அரசு அமையவேண்டும். மீனவர்கள் வாழ்வு சிறக்க நான் ஒரு சபதம் எடுக்கின்றேன் என் குமரிக்கு சென்று, 2014 ஆம் ஏப்ரலில் மோடி பேசினார் . அவர் எடுத்த சபதத்தை சபதத்தை நிறைவேற்றி விட்டாரா? ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர் கூட உயிரிழக்க மாட்டார். இலங்கையால் தமிழக மீனவர், பாகிஸ்தானால் குஜராத் மீனவர்களுக்கு பிரச்னை. இரு மாநில மீனவர்களை இணைத்து பேசி கூட்டு நடவடிக்கை எடுப்போம் என நரேந்திர மோடி சொன்னார்.

2014 முதல் தமிழ்நாட்டு மீனவர்கள் மேல் இலங்கை கடற்படைதாக்குதல் நடத்தலயா? 2015, 2016ல் தாக்குதல் தொடர்ந்தது. 2017ல் தங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோ கொல்லப்பட்டார். பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்க இந்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையிலும், தமிழக மீனவர் மீதான தாக்குதல் தொடர்கிறது. ஒவ்வொரு முறையும் மத்திய அரசுக்கு நான் கடிதம் எழுதிய பிறகு தான் ஏதோ நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 2020-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழக மீனவர் மீது இலங்கை கடற்படையினர் 48 தாக்குதல் சம்பவங்களை நடத்தி உள்ளது. இதில் தமிழக மீனவர் 619 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

83 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், 604 மீனவர், 16 படகுகளை இலங்கை அரசு விடுவித்துள்ளது. நடப்பாண்டில் மட்டும் 74 மீனவரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அதில் 59 பேரை விடுவித்துள்ளது. 67 படகுகள் இலங்கை வசம் உள்ளது.

தமிழக மீது இலங்கை கடற்படை தாக்குதல் தொடர்கிறது எனில் மோடி ஆட்சி பலவீனமான ஆட்சி என்று அர்த்தம்? இரு நாட்டு மீனவர் பிரச்னை குறித்து  இந்திய – இலங்கை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் துறை அமைச்சர் மங்கள சமர வீரவும் சந்தித்து பேசினார். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மீன்பிடி மீதான கூட்டம் நடத்துவது என முடிவெடுத்தனர். எந்த வகையிலும் உயிரிழப்பு ஏற்படக் கூடாது என அக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதை இரு நாடுகளும் ஏற்றுக் கொண்டன. மறுநாள் இரு நாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை ஏற்று இலங்கை செயல்படவில்லை. எல்லைக்குள் அத்துமீறக்கூடிய எவர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்த இலங்கை கடற்படையினருக்கு அதிகாரம் உண்டு என இலங்கை அமைச்சர் சொன்னார். தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கைக்க அரசுடைமை ஆக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்தது.

மோடி அரசு வந்ததும் தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றிய 122 படகுகளை இலங்கை அரசு அரசுடைமை ஆக்கியது. இன்றும் கைது தொடர்கிறது. படகுகளை தர மறுக்கின்றனர் இதற்கு பொறுப்பேற்க வேண்டியது யார்? பாஜக அரசு தான். ஒவ்வொரு முறை மீனவர்கள் தாக்கப்படும்போதும் மத்திய அரசின் கவனத்திற்கு நாம் எடுத்துக்காட்டுகிறோம். அவர்களும் இலங்கை அரசுக்கு சொல்லுகிறார்கள். ஆனால், மறுபடியும் கைதும், தாக்குதலும் நடக்கும். இதுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இதற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், கச்சத்தீவு மீட்பதே  இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சென்னைக்கு வரும்போதெல்லாம் அவரிடம் இந்த கோரிக்கையை நான் வைத்திருக்கிறேன். உங்களிடம் கொடுத்திருக்கிறேன். ஏன் கடந்த வாரம் இலங்கை அதிபர் இந்தியாவுக்கு வந்தபோது கூட 19.7.2023ல் பிரதமருக்கு இது தொடர்பாக நான் கடிதம் எழுதியிருந்தேன். என்றார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com