கீழக்கரை மற்றும் கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்ட மக்களை சந்தித்தார் தமிழக முதல்வர்………

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று வருகை புரிந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி கீழக்கரை மட்டும் கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து ஜமாத் மற்றும் மீனவர்களை சந்தித்து கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் பேசினார்.

கீழக்கரை உள்ள அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதில் கீழக்கரைக்கு பாதாள சாக்கடை திட்டம், கீழக்கரை பகுதியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், கீழக்கரையில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைத்துத் தரவேண்டும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு வரக்கூடாது என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அறவழியில் போராடிய அப்பாவிகள் மீது போடப்பட்ட எப்.ஐ.ஆர் ரை நீக்க கோரியும், கீழக்கரை அரசு மருத்துவமனையை நவீனமயமாக்க கோரியும், கீழக்கரை புதிய பாலத்தை மீன்பிடி துறைமுகமாக மாற்றக் கோரியும், ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை ஏர்வாடி வழியாக தூத்துக்குடிக்கு ரயில் சேவை அமைப்பது சம்பந்தமாக சென்ற ஆண்டு மத்திய அரசு அறிவித்ததை உடனடியாக நிறைவேற்ற கோரியும், வெளிநாடு செல்பவர்களுக்கு அரசு வழிகாட்டி மையம் அமைப்பது சம்பந்தமாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மீனவர்கள் சார்பில் மன்னார் வளைகுடா பகுதிகளில் துறைமுகம் அமைப்பது சம்பந்தமாகவும், கடற்கரைப் பகுதிகளில் கழிவறை வசதி செய்து தருவது சம்பந்தமாகவும், கடல் சீற்றம் புயல் போன்ற இயற்கை பேரிடர் போது கடலுக்குள் செல்லும் மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை கருவி அனைவருக்கும் கொடுப்பது சம்பந்தமாகவும், மற்றும் பல கோரிக்கைகள் மீனவர்கள் சார்பிலும் அளிக்கப்பட்டது. அதற்கு முன் இந்த முன்னதாக கீழக்கரை நுழைவுவாயிலில் கீழக்கரை அதிமுக நகர செயலாளர் தலைமையில் தமிழக முதல்வருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

“இன்றைய செய்தி நிரந்தர வரலாறு”

படியுங்கள் கீழை நியூஸ்.

S.K.V முகம்மது சுஐபு