மதுரை மாவட்டம், சோழவந்தானில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புனரமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். வாடிப்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் பசும்பொன்மாறன் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர்கள் ஜெயராமன், பால்பாண்டியன் முன்னிலை வகித்தனர் சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வக்குமார் வரவேற்றார்.இதில், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் மாவட்ட விவசாய அணி வக்கீல் முருகன். பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் லதா கண்ணன்,பணி நியமனக்குழு ஈஸ்வரி ஸ்டாலின், வார்டு கவுன்சிலர்கள் முத்துச்செல்வி, செல்வராணி, குருசாமி ,சிவா செந்தில்,நிஷா பிற்படுத்தப்பட்ட நலத்துறை உறுப்பினர் பெரியசாமி, தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்ததொழிற்சங்க உறுப்பினர்கள் கண்ணம்மா கல்யாணசுந்தரம் உள்ளிட்டபேரூராட்சி பணியாளர்கள் பேரூராட்சி சங்கத் தலைவர் இரா. பிச்சமுத்து,ஒன்றியக் கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.