ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டை பேரூராட்சி பகுதிகளில் குப்பை கழிவுகள் சாலையோரம் கொட்டப்படுவதால் நோய்பரவும் அபாயம்.

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சி பகுதிகளில் கோழிகழிவுகள் மற்றும் அசுத்தம் ஏற்படுத்தக்கூடிய கழிகளை ஆத்தூர் செல்லும் சாலை அருகே உள்ள குளம் மற்றும் சாலையோரங்களில் ஒருசிலர் கொட்டுகிறார்கள். இதை சித்தையன் கோட்டை பேரூராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்துவதும் இல்லை கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் இல்லை இதனால், அழுக்கல் ஏற்பட்டு துர்நாற்றம் விசுவதோடு நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.

அருகில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தி உதவுவதோடு, நோய்பரப்பும் வகையில் குப்பை கழிவுகளை சாலையோரம் கொட்டி அசுத்தம் ஏற்படுத்துபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆத்தூர் – அப்பாஸ்