Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராஜபாளையம் பகுதியில் உள்ள 36 பஞ்சாயத்துகளுக்கு தூய்மை பணியில் ஈடுபடுத்த புதிய பேட்டரி வாகனங்கள்..

இராஜபாளையம் பகுதியில் உள்ள 36 பஞ்சாயத்துகளுக்கு தூய்மை பணியில் ஈடுபடுத்த புதிய பேட்டரி வாகனங்கள்..

by ஆசிரியர்

இராஜபாளையம் பகுதியில் உள்ள 36 பஞ்சாயத்து களுக்கு தூய்மை பணியில் ஈடுபடுத்த புதிய பேட்டரி வாகனங்களை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 36 பஞ்சாயத்துகள் உள்ளது. இந்த பகுதிகளில் தற்போது கொரோனா நோயை தடுக்கும் விதமாக பஞ்சாயத்துக்கு இரண்டு பேட்டரி வாகனம் ,சில பஞ்சாயத்துகளில் 3 என 36 பஞ்சாயத்து களுக்கும் ஒரு கோடியே 60 லட்சம் மதிப்புள்ள பேட்டரி தூய்மை வாகனங்களை மூகவூர் பஞ்சயத்து அலுவலகத்தில் இருந்து ஊராட்சி ஒன்றிய பெருந் தலைவர் சிங்கராஜ் மற்றும் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். விழா ஏற்படுகளை பஞ்சாயத்து தலைவர் முனியசாமி, துணை தலைவர் சுரேஷ் செய்திருந்தனர்

மேலும் இந்த வாகனத்தை ஊராட்சி மன்ற பெருந்தலைவர் சிங்கராஜ் , MLA தங்கபாண்டியன் ஓட்டிச் சென்று வாகனங்கள் எவ்வாறு இயங்குகின்றன என அதிகாரிகளிடம் கேட்டிருந்தனர். இந்த வாகனங்களில் 6 பேட்டரி ஹைட்ராலிக் மூலம் குப்பைகளை கொட்டுவது மற்றும் குப்பைகளை வீடுகளிலிருந்து வாங்குவதற்காக மைக் ஒலிபரப்பின் மூலம் அறிவிப்பு வழங்குவது என பொதுமக்கள் பயன்பாட்டி ற்க்கு வருகின்றன. தற்போது உள்ள நோய் தொற்றும் அபாயத்தை குறைக்க இந்த வாகனங்கள் பெரும் உதவியாக இருக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!