கீழக்கரையில் CITU சார்பாக டில்லியில் வாழ்வுரிமை கேட்டு போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் முற்றுகை போராட்டம்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில்  டில்லியில் வாழ்வுரிமை கேட்டு போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும்,  விவசாயிகள் மீது தாக்குதல் கொடுக்கும் பிஜேபி அரசை கண்டித்தும் கீழக்கரை ஸ்டேட் பேங்க் முன்பு கீழக்கரை தாலுகா செயலாளர் மகாலிங்கம் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் முருகேசன், சர்புதின், கருப்பசாமி, முணியாண்டி, கிளைசெயலாளர்கள் காயம்பு,  பாலு லெட்சுமணண்,  CITU ஒருங்கிணைப்பாளர் செல்வவிநாயகம் மற்றும் தோழர்கள் விக்டர், கிருஷ்ணன், குருநாதன், ராதா,  சோமு, முணியாண்டி, இராமலிங்கம், மாயழகு, சண்முகம், கட்டுமான தோழர்கள் சந்திரன், மெய்யன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.