சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை செகரடேரியட் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 300 வீடுகள் உள்ளன. இங்கு லிப்ட் ஆபரேட்டர், எலக்ட்ரீசியன், வாட்ச்மேன்கள், உதவியாளர்கள் என மொத்தம் 50 பேர் பணியில் உள்ளனர்.
இங்கு ஒரு வீட்டில் வசித்து வருபவர் 11 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளிக்கு லிப்ட்டில் செல்லும் போது லிப்ட் ஆபரேட்டர் ரவியுடன் (66) பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் பள்ளிக்கு சென்ற சிறுமியை லிப்ட் ஆபரேட்டர் மறைவான இடத்துக்கு கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து அடுத்த சில நாட்கள் கழித்து இன்னும் சில பேரை அழைத்து அந்த பெண்ணை பேஸ்மெண்ட் பகுதி, பொது கழிப்பறை, ஆளில்லாத வீடுகள், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட இடங்களில் பலாத்தாரம் செய்ய வைத்துள்ளார்.
இதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு சிறுமியை மிரட்டியதால் அவர் வெளியே சொல்லாமல் இருந்துள்ளார். இதையறிந்த ரவி, அந்த அபார்ட்மெண்டில் பணிபுரியும் மேலும் சிலரை அழைத்து பலாத்காரம் செய்ய வைத்துள்ளார்.
தொடர்ந்து 7 மாதங்களாக இதுபோன்று நடைபெற்றதால் அந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போதுதான் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் தாயின் புகாரின் பேரில் 17 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து அவர்களை சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர்கள் 17 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி மஞ்சுளா உத்தரவிட்டுள்ளார். இது மட்டுமல்லாது மேலும் 8 பேரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியின் கழுத்தில் கத்தியால் கீறியதால் 17 பேர் மீதும் போக்சோ சட்டமும் , கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் சிரிஞ்சுகள், காலி பாட்டில்கள் ஆகியவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.
You must be logged in to post a comment.